கால்நடை நண்பன் JTK கேள்வி பதில் தொகுப்பு - 1


கேள்வி:மாட்டிற்கு சினை ஊசி போட்டு 7 நாள் ஆகிறது எள்ளு புண்ணாக்கு வைத்தோம் சினை கலைந்து விட்டதாக தெரிவித்தார்கள் இது உண்மையா????

பதில்:சினை ஊசி போட்டு ஏழு நாட்களுக்குள் சினை பிடித்து இருக்கிறதா இல்லையா என்று தெரிவிப்பதற்கு ஸ்கேன் செய்தால் மட்டுமே சொல்ல முடியும். எள்ளு புண்ணாக்கு போடுவதால் சினை கலையாது அனைத்து வகையான மாடுகளுக்கும் எள்ளு புண்ணாக்கு போடலாம்.

கேள்வி :கலப்பின மாடுகளில் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்

பதில்:கலப்பின மாடுகள் சுமார் 12 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும் ஆனால் நடைமுறையில் ஐந்து கன்றுகள் போட்டவுடன் அந்த மாட்டை விற்று விடுவது வழக்கமாக உள்ளது. சுமார் ஐந்து கன்றுகள் போட்ட கலப்பின பசு எட்டு அல்லது ஒன்பது வயதாக இருக்கும்.

கேள்வி :கன்றுக்குட்டி பிறக்கும்போதே இறந்து பிறந்தது இதற்கு என்ன காரணம்???

பதில்:கன்று குட்டி இறந்து பிறப்பதற்கு பல காரணங்கள் உண்டு. பிறக்கும் போது ஏற்படும் பிரச்சனையாக இருக்கலாம், கர்ப்பப்பையில் வளர்ச்சி காலத்தில் ஏற்படும் சத்து குறைபாட்டால் இருக்கலாம்.  மறுப்பு காலத்தில் சரிவிகித சமசீர் தீவனம் கொடுப்பதன் மூலம் மற்றும் சீரான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலமும் கன்று குட்டி இறந்து பிறப்பதை தடுக்கலாம். 

கேள்வி :கன்று குட்டிகள் 7 மாத சினைக் காலத்தில் விசிறி விடுவது ஏன்?

பதில்:கன்றுக்குட்டிகள் குறைபிரசவத்தில் விசிறி விடுவது. நோய் தொற்றாக இருக்கலாம், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடாக இருக்கலாம் மற்றும் சாது குறைபாட்டால் இருக்கலாம்.  தாது உப்புக்கலவை மற்றும் சமசீர் தீவனம் தருவதன் மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும். 

கேள்வி :என்னுடைய மாடு 4 பல் பட்ட பிறகும் இன்னும் சினை பருவத்திற்கு வராமல் குள்ளமாகவும் மெல்லியதாகவும்  உள்ளது இதற்கு என்ன காரணம் என்ன செய்வது??

பதில்: நம் கிராம புறங்களில் அனைவரது வீட்டிலும் குள்ளமாகவும், பானை வயிறுடனும் நாலு பள்ளு கிடாரி சினை பருவத்துக்கு வராமல் இருப்பதற்கு முக்கிய கரணம் வயிற்றில் உள்ள பலவகையான குற்றபுழுக்களே. இவை கன்றுகளின் உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு கன்றுகளை வளர விடாமல் தடுக்கின்றது. இதற்கு ஒரே தீர்வு. தகுந்த நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.  கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படியே செய்ய வேண்டும்.

கேள்வி :என்னுடைய கறவைப் பசு போன வருடம் கன்று ன்றபோது நஞ்சுக்கொடி சரியாக போடவில்லை இப்பொழுது சினையாக உள்ளது இந்த முறையும் அவ்வாறு நடைபெற வாய்ப்பு உள்ளதா???

பதில்:நஞ்சுக்கொடி போடாததற்கு பல காரணங்கள் உண்டு ஒரு முறை சரியாக நஞ்சுக்கொடி போடவில்லை என்றால் அடுத்த முறையும் அதே போன்று நடக்கும் என்று எதிர்பார்ப்பது தவறான கருத்து. சரியான அளவில் சத்துக்கள் கிடைக்க நேரும்போது நஞ்சுக்கொடி போடுவதில்  எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. தாது உப்பு கலவை  மற்றும் சமச்சீர் தீவனமும் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனையை தடுக்கலாம்.

கேள்வி :ஒரு மாடு கன்று போட எத்தனை நாட்கள் எடுக்கும்???? மாட்டின் சினை பருவ காலம் எத்தனை நாட்கள்????

பதில்:ஒரு மாடு கன்று ஈனுவதற்கு 280 நாட்கள் ஆகும். சில மாடுகள் பத்து நாள் முன்னரே போடவும் செய்யும் அல்லது பத்து நாள் கழித்து போடும்.

கேள்வி :சார், கறவை மாட்டுக்கு எள்ளு புண்ணாக்கு போட்டோம். பால் திரிதிரியாக வருகிறது.என்ன செய்வது.

பதில்:எள்ளு புண்ணாக்கு போடுவதால் பால் திரிதிரியாக வராது அது மடிநோயாக  இருக்கலாம் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவும்.


Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts