Showing posts with label KCC. Show all posts
Showing posts with label KCC. Show all posts

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கான விவசாய கடன் அட்டை (Kisan Credit Card)

விவசாய கடன் அட்டை திட்டம் இந்திய வங்கிகளால் 1998-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம் ஆகும். விவசாயம் மற்றும்  கறவை மாடு வளர்ப்போர் தேவைக்கேற்ப குறுகிய கால கடன்கள் மற்றும் நீண்ட கால கடன்கள் வழங்கப்படுகிறது. மீண்டும் தற்பொழுது, இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1.5 கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் பால் கூட்டமைப்புகள் மற்றும் கூட்டுறவு மையங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்ற சிறப்பு முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் குறிக்கோள்:
 குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கும் கறவை மாடு வளர்ப்போர்களுக்கும் கடன் வழங்க வேண்டும்.
*இந்தத் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்ப்போர் 3 லட்சம் வரை ஈட்டுறுதி(insurance) அடிப்படையில் கடனாகப் பெறலாம். 1.6 லட்சம் வரை கடனாக பெறுவதற்கு எந்த ஈட்டுறுதியும் வேண்டாம். 
*7% வட்டியுடன் கடன் பெறலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். உரிய காலத்திற்குள் கடனைத் சரியாக திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீதம் மானியமாக வங்கி கணக்கில் கொடுக்கப்படும்.
*அருகிலுள்ள பால் கூட்டுறவு மையம் அல்லது சேமிப்பு கணக்கு உள்ள வங்கி அல்லது கால்நடை மருத்துவமனையில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாய கடன் அட்டையை பெறலாம்.
*கடன் அட்டை கணக்கில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.
கடன் பெறுவதற்கான தகுதிகள் (Eligiblity):
*விவசாயம் அல்லது கறவை மாடு வளர்ப்போர் அனைவரும் விவசாயக் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
* குறைந்தபட்ச வயது : 18 வயது
   அதிகபட்ச வயது : 75 வயது
*விவசாயக் கடன் பெறுவோர் 60 வயதிற்கு மேல் உள்ளவராக இருந்தால், விவசாயக்கடன் பெறுவோரின் சட்டபூர்வமான வாரிசாக இருப்பவர் இணைந்து( co- borrower) கடன் பெற வேண்டும்.
*விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின்படி குறைந்த வட்டி விகிதத்தில் கடனை பெற்று, கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் அடைவோம்.
*விவசாய கடன் அட்டையின் மூலம் பெரும் கடனை 5  வருடத்திற்குள் செலுத்த வேண்டும். ஐந்து வருடத்திற்குள் கடனை செலுத்த முடியாதவர்களுக்கு  ஒரு வருட காலம் கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்கப்படும்.

சு.மகேஷ்வரி

கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவி

ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

புதுச்சேரி-09.



Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts