Showing posts with label First Aid. Show all posts
Showing posts with label First Aid. Show all posts

பண்ணையில் முதலுதவிப்பெட்டி

 

 வேதிப்பொருள்கள்:

1. போவிடோன் ஐயோடின் (Povidone Iodine)

சிறந்த கிருமிநாசினி

புண் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பிறந்த கன்று குட்டியின் தொப்புள் கொடியை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது

 

2. டிஞ்சர் பென்சாயின் (Tincture Benzoin)

கால்நடைகளில் கொம்பு உடைத்தல் போன்றவற்றால் ஏற்படும் அதீத இரத்தப்போக்கை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

இதை அடிபட்டஇடத்தில் தடவி கட்டுத்துணியால் கட்டவும். இரத்தப்போக்கு கட்டுப்படும்.

5  மில்லி டிஞ்சர் பென்சாயினயை ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் கலந்து சளி, செருமல் இருக்கும் மாடுகளுக்கு வேதுபிடிக்க பயன்படுத்தலாம்.

 

3. போரிக் அமிலம் தூள் (Boric Acid Powder)

கால்நடைகளில் ஏற்படும் காயங்களுக்கு இந்த தூளை வேப்பஎண்ணெய் சேர்த்து அதன்மேல் தடவலாம்.

போலி பசுஅம்மை, வாய்க்கோமரி போன்ற நோய்களால் ஏற்படும் புண்களை குணமாக்க வல்லது.

 

4. எப்சம் உப்பு (MgSo4) - (Epsom Salt)

இது வெளிமம் நாலுயிரகக்கந்தகம் (மக்னீசியம் சல்பேட்டு)

கால்நடைகளில் முட்டிவீக்கம், உடலில் கல்லு போல வீக்கம் இருந்தால் அதன்மேல் இதனை தடவலாம்

 

5. கிளிசரின் (Glycerine)

இதனை போரிக் அமிலம், அல்லது எப்சம் உப்புடன் கலந்து கால்நடைகளில் முட்டி வீக்கம்சீழ்க்கட்டி மேலே தடவலாம்.

இதனை கால்நடைகளின் பால் மடியில் தடவக்கூடாது

 

6. சுண்ணாம்புத்துண்டு / நாமக்கட்டி (Chalk  Piece)

இதனை வினிகர் (அ) காடி உடன் கலந்து கால்நடைகளில் மடிவீக்கத்துக்கு முதலுதவியாக தடவலாம்.

 

7. பொட்டாசியம்  பெர்மாங்கனேட் (Potassium Permanganate):

இது சாம்பரம் நாலுயிரகமங்கனம் எனப்படும்

சிறந்த கிருமிநாசினி - கொட்டகைத்தரைகள், தீவனத்தொட்டிகள், பால்கறவை இயந்திரங்கள், கைகால்கள், கால்நடைகளின் மடி, குளம்புகளை சுத்தம் செய்ய சிறந்த கிருமிநாசினி

மடிநோய் வராமல் தடுக்க மாட்டின் மடியைக்கழுவ இதனை பயன்படுத்தலாம்.

நஞ்சுக்கொடியைசரியாக போடாத மாடுகளில் கழிவுவெளியேற்றும் போது வரும் துர்நாற்றத்தை தடுக்க பயன்படுத்தலாம்.

 

8. டர்பென்டின் எண்ணெய் (Turpentine oil)

இதனை காயத்தில் உள்ள புழுக்களை வெளியிலெடுக்க பயன்படுத்தலாம்.


இயற்கைப்பொருள்கள்:

இயற்கைப் பொருள்கள்

பயன்பாடு

1. வேப்பஎண்ணெய்

எந்தவகை காயங்கள்மேலும் இதனை தடவலாம். ஈ, கொசு போன்றவை காயத்தை அரிக்காமல், புழுவைக்காமல்  காக்கும். 

2. மஞ்சள்தூள்

சிறந்த இயற்கை கிருமிநாசினி. இதனை வேப்பஎண்ணெய்யுடன் சேர்த்து தடவலாம்

3. பச்சைக்கற்பூரம்

காயங்களில் புழு வைத்துவிட்டால், இயற்கைமுறையில் அதனை வெளியெடுக்க பச்சைக்கற்பூரம், வேப்பெண்ணை, மஞ்சள்தூளை காயத்தில் தடவினால் புழுக்கள் வெளியேறும்.


உபகரணங்கள்:

1.      பஞ்சு சுருள்கள்

2.      பஞ்சு வலைக்  கட்டுத்துணிகள்

3.      அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்

4.      அறுவை சிகிச்சை இடுக்கி (Forceps) - புழுக்களை எடுக்க பயன்படுத்தலாம்


தொகுப்பு: 

கார்க்கி. , B.E, M.A

தேர்வு பயிற்சியாளர் / Exam Trainer & Mentor

Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts