பால் கறவை குறைந்தால் என்ன செய்வது

இயல்பாக பால் கறக்கும் கறவை மாடுகள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது திடீரென பால் ஜுரம் வந்தாலோ தன்னுடைய இயல்பான பால் உற்பத்தி  சற்று குறைந்து பால் காணப்படும். இதை சரி செய்வதற்கு 100 கிராம் கருப்பு உளுந்து முழு உளுந்து (ஊறவைத்து அரைத்தது) அதனுடன் 100 கிராம் மண்டை வெல்லம் கலந்து தினசரி ஒருவேளை தொடர்ந்து 10 நாட்களுக்கு கொடுத்துவர பால் உற்பத்தி அளவு உயரும். 
சில மாடுகள் கன்று ஈன்ற பிறகு பால் சுரப்பு கிடைக்காது இதுபோன்ற மாடுகளுக்கும் மேற்கூறிய முறையை பயன்படுத்திப் பார்க்கலாம் இரண்டு நாட்களில் முன்னேற்றம் இல்லை என்றால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது.


குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முதலுதவி மட்டுமே மருத்துவம் அல்ல

ஆடுகளுக்கு பால் சுரக்க
கைப்பிடி அளவு உளுந்து கைப்பிடி அளவு அரைத்த பிரண்டை கைப்பிடி அளவு வெல்லம் இது மூன்றையும் கலந்து ஏழு நாட்களுக்குக் கொடுத்து வரவும்


Share:

மாட்டிற்கு எந்த நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்???????


மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வதற்கென தனி ஒரு அட்டவணை இருந்தாலும் கால்நடை வளர்க்கும் நண்பர்களுக்கு பெரும்பாலும் எழக்கூடிய சந்தேகம், எப்பொழுது குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்??? என்பதுதான் மூன்று வார கன்றுகுட்டியை தவிர வேறு எந்த வயதாக இருந்தாலும் அது கிடேரி , சினை மாடு, மறுப்பு மாடு மற்றும் கறவை மாடு ஆகட்டும் உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி நீங்கள் குடற்புழு நீக்கம் செய்யலாம்.
பின்குறிப்பு: குடற்புழு மருந்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரிடம் விட்டு விடுங்கள்.

Share:

மாட்டுக்கு எள்ளுப் புண்ணாக்கு கொடுக்கலாமா??????

மாடுகளுக்கு புண்ணாக்கு அடர் தீவனம் என்ற வகையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, பருத்தி புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்ற பலவகை புண்ணாக்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களிடம் பரவலாக இருக்கும் ஒரு கருத்து எள்ளு புண்ணாக்கு வைத்தால் மாடு இளைத்து விடும் என்பது. கிராமங்களில் ஒரு பழமொழி இருக்கிறது என்னவென்றால் "கொழுத்தவனுக்குகொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இந்தப் பழமொழி நமக்கு கூறும் கருத்து இதிலிருந்து நமக்கு கிடைக்கப் பெறும் தகவல் எள்ளு கொடுப்பதால் மாடுகள் இளைப்பதில்லை மாறாக பால் கூடுதலாக கிடைக்கின்றது. இந்த தவறான கருத்தை கைவிடுமாறு கால்நடை நண்பர்களுக்கு சிறிய வேண்டுகோள் விடுகிறேன் கறவை மாடுகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுப்பதால் எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.

அனைத்து வகை மாடுகளுக்கும் எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம் எந்த ஒரு பாதிப்பும் வராது

எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாமா????.

Share:

கன்று குட்டிகளுக்கான குடற்புழு நீக்கம்


குடற்புழு நீக்கம் கன்றுக்குட்டிகளுக்கு முக்கியமான பராமரிப்பு சார்ந்த விஷயமாக இருக்கிறது. கன்று பிறந்த 21 நாட்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். பின்பு 6 மாதம் வரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு குடற்புழு நீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். கன்று குட்டி கிடேரி ஆன பிறகு வருஷம் இரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் நல்லது. இந்த அட்டவணைப்படி குடற்புழு நீக்கம் செய்துவந்தால் கன்று குட்டிகள் விரைவில் பருவத்திற்கு வரும் நாம் செய்யும் கால்நடை வளர்ப்பு தொழில் லாபகரமாக அமையும்.

மாடுகளை பொறுத்தமட்டில் வருடம் இருமுறை குடற்புழு நீக்கம் செய்தால் நல்லது மழைக்காலத்திற்கு முன்னரும் வெயில் காலத்திற்கு முன்னரும்


Share:

கோமாரி தடுப்பூசியின் அவசியம்

கோமாரி நோய்
ஒரு பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய். இந்த நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் கோமாரி ஒழிப்புத்திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருடத்திற்கு இரு முறை கோமாரி நோய்க்கான தடுப்பூசி கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது. மக்கள் இதை பயன்படுத்திக்கொண்டாள் இந்த நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பை கட்டுப்படுத்த முடியும்.

குறிப்பு :

தடுப்பூசி போடுவதால் கருச்சிதைவு ஏற்படாது 

பால் உற்பத்தி குறையாது

கோமாரி தடுப்பூசி விழிப்புணர்வு பாடல்

Share:

மடி நோய் என்றால் என்ன ?

மடிநோய் என்பது பராமரிப்பு சம்பந்தப்பட்ட நோய்

கிருமிகளின் தாக்குதலால் மடிவீக்க நோய் வருகிறது
எப்படி பரவுகிறது ?
- சுத்தமின்மை
¨ சுத்தமில்லாத கட்டுத்தரை /தொழுவம்,
¨ சுத்தமில்லாத கறவையாளர் கைகள்
¨ சுத்தமில்லாத மடி / காம்பு ஆகியவற்றின் மூலமாக மடி நோய் வரும்

எதனால் வருகிறது ?

பால் கறந்த பின் மடி காம்பின் துவாரம் ஒரு மணி நேரம் வரை திறந்து இருக்கும் , அச்சமயத்தில் பசு கிழே அமர்ந்தால் கிருமிகள் காம்பு துவாரம் மூலமாக கிருமிகள் உட்புகுந்து மடி நோய் வரும்.
காரணிகள்
  • பலவகையான கிருமிகளால் மடிநோய் வரக்கூடும்
  • பாக்டீரியா , வைரஸ் ,பாசி ஆகிய அனைத்து வகையான கிருமிகளால் மடிநோய் வரும்.

தடுப்பு முறைகள்

சுத்தமான பால் உற்பத்தியின் மூலம் மடிநோயை தவிர்க்கலாம்
சுத்தமான கட்டுத்தரை / கொட்டகை
¨ ஒருநாளுக்கு இருமுறை கட்டுதரையை சுத்தம் செய்யவேண்டும்
¨ மாட்டின் சாணம் மற்றும் கோமியம் கட்டுதரையில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் .
¨ கட்டுதரையில் சுண்ணாம்பு மற்றும் ப்ளீசிங் பவுடர் தெளிப்பதன் மூலம் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுபடுத்தலாம்
சுத்தமான கறவைமாடு
¨ கறவை மாடுகளை தினமும் சுத்தபடுத்துதல் நல்லது (அ) இருநாட்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தலாம் .
¨ கறவை மாடுகளின் கால் / தொடை /மடி/காம்புகளில் சாணம் இருந்தால் பால் கறப்பதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டும்
¨ சுத்தமானநீர் (அ) வெந்நீர் (அ) Kmnoபயன்படுத்தலாம்
சுத்தமான கறவையாளர் கைகள்
  • பால் கறவையாளர் பால் கறப்பதற்கு முன்பு தன் இரு கைகளையும் சுத்தமாக கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்
  • கறவை இயந்திரம் பயன்படுத்தினால் இயந்திரத்தை சுத்தமாக கழுவிய பின்னரே பால்கறக்க வேண்டும்
  • KMno4 /சோப்பு பயன்படுத்தலாம்
சுத்தமான மடி/காம்பு
¨ பால் கறப்பதற்கு முன்னர் மடி/ கம்புகளை சுத்தமான வெந்நீர்/ KMno/ SAAF KIT பயன்படுத்தி கழுவலாம்
¨ பால் கறந்த பின் காம்புகளை KMno/ SAAF KIT நனையும் படி செய்யவும்
குறிப்பு : பால் கறந்த பின்னர் ஒரு மணி நேரம் வரை கறவை மாட்டை அமராமல் பார்த்து கொள்வது அவசியம் . தீவினம் அளிப்பதன் மூலம் இதை நடைமுறை படுத்தலாம். மேலும் மேற்குறிய தடுப்பு முறைகளை தினம் பின்பற்றினால் மடி நோயினை 95 % கட்டு படுத்தலாம்


மடி நோயால் வரும் நஷ்டங்கள்

* மடி நோய் பால் உற்பத்தியை குறைக்கும்
* மடி நோய் தாக்குதலால் ஒரு காம்பு முழுவதும் வீணாகும் வாய்ப்புள்ளது.
* 10 லீ கறந்த பசு 7-8 லீ கறக்கும் நிலை வரலாம்.
* அந்த மடி நோயால் பாதிக்கப்பட்ட பசு தன் இயல்பான பால் உற்பத்தி நிலைக்கு திரும்ப வருவது கடினமாகிவிடும்.
* குறைந்த பட்சம் 100 மில்லி ஒரு நாளைக்கு குறைந்தால் கூட, சராசரி 30 லீ பால் (கறவை காலத்தில்) நஷ்டமாகும்.
* இதன் மூலம் விவசாயிக்கு 2000 - 3000 ரூபாய் மறைமுகமான இழப்பு ஏற்படலாம்.
* மடி நோய் சிகிச்சை, பால் உற்பத்தி குறைவு , தீவின செலவு என பல வகைகளில் நஷ்டம் ஏற்படும் வாய்புள்ளது
* சரியான நேரத்தில் மடி நோயை குணப்படுத்தவில்லை என்றால் பால் உற்பத்தியின் அளவு பழைய நிலைக்கு திரும்புவது கடினமாகிவிடும்
* அதனால் இந்த மடி நோய் வராமல் தடுப்பதே சிறந்த வழியாகும்.
Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts