கால்நடைவளர்ப்பில் கீரையின் பங்கு!!!

 

கால்நடை வளர்ப்பில் கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள், கோழி, வான்கோழி போன்ற பறவைகள், முயல் போன்ற சிறு இனங்கள் முக்கிய பங்குஅளிக்கின்றன. கன்றுகள், ஆட்டுக்குட்டிகள் பசுதீவனத்தை அறிமுகம் செய்யும்போது கீரைகளில் இருந்து தொடங்கலாம். இவைகளின் வளர்ச்சியில் கீரைகளின் பங்கு மகத்தானது, இதைப்பற்றிய தகவல்களை பார்க்கலாம்.


ஏன் கீரைகளைப் பயன்படுத்த வேண்டும்?

1.  கீரைகளில் பல நுண்சத்துக்களும், உயிர்ச்சத்துக்களும் உள்ளன

2.  எளிதில் உணவுகள் செரிமானம் ஆக உதவும்

3.  கால்நடைகளில் குறிப்பாக குட்டிகளுக்கு இளம்வயதில் ஏற்பட்டும் வளர்ச்சி குறைபாடு, குடற்புழு தாக்கம், சத்துக்குறைபாடுகளை களைய உதவும்

4.  சீரான உடல்வளர்ச்சி பெற உதவும்

5.  சருமநோய், முடிஉதிர்தல், சொறி போன்ற தாக்கங்கள் கால்நடைகளில் குறையும்

6.  முட்டையிடும் கோழிகள், வான்கோழிகள், வாத்துகளுக்கு முக்கிய பயன்களைத்தரும் - திறனான ஓடுகள், சத்தான கரு என முட்டைகளின் தரம் உயரும்

7.  கால்நடைகளில் கருக்கூடாமை,  கருவளர்ச்சியின்மை, பருவசுழற்சி கோளாறுகளை தீர்க்கவல்லது   

8.  எளிதில் வளர்க்கக்கூடிய பசுந்தீவன வகை - குறிப்பாக மரவகைக்கீரைகள்

9.  அதிகளவில் உற்பத்திசெய்தால் இதரவருமானமாகவும் பயப்பெறலாம்

10. கோடைகால அயற்சியை குறைக்கலாம்

 

செடி வகைக்கீரைகள்:

1.     கொத்தமல்லி கீரை

2.     முளைக்கீரை

3.     அரைக்கீரை

4.     தண்டுக்கீரை

5.     புளிச்சக்கீரை

6.     கரிசலாங்கண்ணி கீரை

7.     பாலக்கீரை

8.     மணத்தக்காளிக் கீரை

9.     பசலைக்கீரை

10.   பொன்னாங்கண்ணிக்கீரை

 

மரவகைக் கீரைகள்:  

1.      கறிவேப்பிலை

2.      முருங்கைக் கீரை

3.      அகத்திக்கீரை

4.      நச்சுக் கொட்டைக் கீரை

 

கீரைகளில் உள்ள சத்துக்கள்:

1.  வைட்டமின் A-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin A)

அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்ககைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை

 

2.  வைட்டமின் B-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin B)

கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை

 

3.  வைட்டமின் C-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin C)

அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் இலை, கொத்தமல்லி

 

4.  சுண்ணாம்பு சத்து (Calcium) அதிகம் இருக்கும் கீரைகள்

அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக்கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, நச்சுக் கொட்டைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பாலக்கீரை

 

5.  இரும்புச் சத்து (Iron) குறைபாட்டிற்கு உதவும் கீரை வகைகள்

முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக்கீரை

 

6.  எல்லா வைட்டமின் (Vitamin) சத்துக்களும் தாதுஉப்புக்களும் (Minerals) ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரை


செடி வகைக்கீரை சாகுபடி

ஒரு சென்டிற்கு 10 முதல் 20 கிராம் விதை தேவைப்படும். (வகையைப்பொறுத்து)

ஒரு சென்டில் கீரை (வகையைப்பொறுத்து) 30  முதல் 40 கட்டுகள் அறுவடைசெய்யமுடியம்.

அறுவடைநாட்கள்: 25  முதல் 120  (கீரை வகையைப்பொறுத்து)


சுழற்சிமுறையில் 10 சென்டில் கீரை வளர்க்கும்போது வாரத்திற்கு ஓரிரு  முறையிலிருந்து தினமும் ஒரு வகை கீரையை கால்நடைகளுக்கு கொடுக்கமுடியும்.

 

நன்றி

கார்க்கி. ஆ

Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts