Showing posts with label புண்ணாக்கு. Show all posts
Showing posts with label புண்ணாக்கு. Show all posts

கறவை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் கவனம் தேவை


கால்நடை வளர்ப்பு லாபகரமாக கொண்டு செல்ல பாலின் உற்பத்தி செலவை  குறைப்பதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் ஏனென்றால் பால் உற்பத்தி செலவில் 65% சதவீத செலவு தீவன செலவு ஆகும். இதை மனதில் கொண்டு தீவன மேலாண்மையை  சரிவர பின்பற்றினால்  கறவை மாடு வளர்ப்பில் நாம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.  தீவனம் அளிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே ஆனால் அதை எப்படி அளிப்பது,  எப்படி அளிக்கக்கூடாது,  என்றும் தெரிந்துகொள்வது  கறவை மாடு  வளர்ப்பில் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது.  இந்த நோக்கில் ஒவ்வொரு கால்நடை விவசாயிகளும் பின்பற்றவேண்டிய தீவன மேலாண்மையின் முக்கிய பயன்பாடுகளை  இந்த கட்டுரையில் காண்போம்.


கறவை மாடுகளுக்கு நாம் அளிக்கும் தீவன வகைகள் - பசும் தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனம் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே ஆகும். அனால் அதை கறவை மாடுகளுக்கு எப்படி கொடுப்பது என்பதை தெரிந்து கொள்வது நம் கடமையாக உள்ளது.   

முக்கியமாக பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என நாம் அனைவரும் நினைக்கும் ஒரு தவறான கருத்து அதிகமாக தீவனம் கொடுத்தால் அதிகமாக பால் கறக்கும் என்பதுதான் இது நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டால் கிடையாது ஏனென்றால் மனிதர்களை போன்ற குடலமைப்பு கறவை மாடுகளுக்கு கிடையாது.  மாடுகளுக்கு நான்கு வகையான உணவுப் பைகள் உண்டு அதை போட்டி என்று அழைக்கப்படுகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்கள், கிருமிகள் வாழ்கின்றன. கறவை மாடுகள் உண்ணக்கூடிய பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம் இவை அனைத்தையும் இந்த கிருமிகள் ஜீரணித்து உடலுக்கு தேவையான சத்துக்களாக மாற்றி பின் சிறுகுடல் குடலிற்கு அனுப்புகிறது.

இந்த ஒரு விஷயத்தை மட்டும் தான் நாம் மனதில் கொள்ள வேண்டும். புதிதாக மாடு வாங்குபவர்கள்,  சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கறவை மாடுகளுக்கு திடீரென்று தீவனத்தை மாற்றுவது சரியான விஷயம் கிடையாது ஒரு தீவனம் அளித்து கொண்டு வரும்போது அந்த தீவனத்திற்கு ஏற்றார்போல் உணவுப் பைகளில்  உள்ள கிருமிகள் அந்த சத்துக்களை ஜீரணிக்க செய்கிறது ஆனால் உணவில் மாற்றமோ  குறைவோ ஏற்படும் போது அந்த மாடுகளின் உணவு பைகளில் உள்ள கிருமிகள் அந்த தீவனத்தை ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது . இதனால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது, பால் உற்பத்தியும் குறைகிறது.புதிது புதிதாக தீவனகள் அளிப்பதை தவிர்த்து சமச்சீர் சரிவிகித தீவனம் அளித்து வர வேண்டும்.  இதை தடுப்பதற்கு நாம் பின்பற்றவேண்டிய மேலாண்மை விஷயங்கள் என்னவென்றால்

நாம் கறவை மாடுகளுக்கு அளித்துவரும் தீவனங்களை திடீரென்று மாற்றக்கூடாது உதாரணத்திற்கு இன்று குச்சி தீவனம் கொடுத்து வரும் ஒரு விவசாயி நாளை குச்சி தீவனம் தீர்ந்துவிட்ட பிறகு இன்று ஒரு நாளைக்கு மட்டும் கோதுமை தவிடு கொடுக்கலாம் என்று நினைத்தால் பாதிப்பு அங்கேயே தொடங்குகிறது நாம் எந்த ஒரு தீவனத்தை குறைத்தாலும் இல்லை மாற்றி கொடுத்தாலும் அதை படிப்படியாக செய்ய வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு முறை தீவனத்தில் மாற்றம் கொண்டு வரும் போதும் அது நேரடியாக உணவுகளில் இருக்கும் கிருமிகளை பாதிக்கிறது கிருமிகளை பாதிக்கும் போது வயிற்றில் அஜீரண கோளாறு ஏற்படுகிறது இதன் தாக்கமாக மாடுகள் சரிவர சத்துக்களை ஜீரணம் செய்யாமல் கழிய தொடங்குகிறது இதனால் பெருமளவில் பால் உற்பத்தி திறன் குறைகிறது புதிதாக மாடு வாங்கி வருபவர்கள் நீங்கள் யாரிடத்தில் மாடு வாங்குகிறார்களோ அவர்களிடம் என்ன வகையான தீவனம் கொடுத்தார்கள் என்று கேட்டு முதல் ஒருவாரம் அதையே பின்பற்றி பின் பொறுமையாக நீங்கள் அளித்துவரும் கலப்பின அடர்தீவன விஷயங்களை பின்பற்றி வரலாம் அப்படி செய்யும்போது நமக்கு பொருளாதார இழப்பு ஏற்படாது.

எனவே முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் தீவனத்தை கால்நடைகளுக்கு முக்கியமாக கறவை மாடுகளுக்கு திடீரென்று மாற்றுவதை தவிர்க்கவும் குறிப்பிட்ட தீவனத்தை மாற்றி அளிக்கும் போது படிப்படியாக உயர்த்துங்கள் உதாரணத்திற்கு நாலு கிலோ அடர்தீவனம் நீங்கள் கொடுத்து வருகிறீர்கள் என்றால் முதல் நாள் அரை கிலோ குறைத்து புதிய தீவனத்தில் புதிய தீவனத்தில் கலந்து கொடுக்கலாம் நாளடைவில் அரை கிலோ ,ஒரு கிலோ பின்பு ஒன்றரை கிலோ பின்பு இரண்டு கிலோ அதனைத் தொடர்ந்து படிப்படியாக புதிய தீவனத்தை அளவை உயர்த்தலாம். இந்த முறை அனைத்து வகையான தீவனகளுக்கும் பொருந்தும் .

மேற்குறிய தகவல்களை பின்பற்றினால் நம் கறவை பசுக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது, பால் உற்பத்தி அளவும் குறையாது. பொருளாதார இழப்பை பெருமளவு கட்டு படுத்தலாம்.

 

முனைவர். சா. தமிழ்க்குமரன்

(கால்நடை நண்பன் JTK)

கால்நடை மருத்துவர் / பண்ணை ஆலோசகர்

புதுச்சேரி.

 


Share:

மாட்டுக்கு எள்ளுப் புண்ணாக்கு கொடுக்கலாமா??????

மாடுகளுக்கு புண்ணாக்கு அடர் தீவனம் என்ற வகையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, பருத்தி புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு போன்ற பலவகை புண்ணாக்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களிடம் பரவலாக இருக்கும் ஒரு கருத்து எள்ளு புண்ணாக்கு வைத்தால் மாடு இளைத்து விடும் என்பது. கிராமங்களில் ஒரு பழமொழி இருக்கிறது என்னவென்றால் "கொழுத்தவனுக்குகொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இந்தப் பழமொழி நமக்கு கூறும் கருத்து இதிலிருந்து நமக்கு கிடைக்கப் பெறும் தகவல் எள்ளு கொடுப்பதால் மாடுகள் இளைப்பதில்லை மாறாக பால் கூடுதலாக கிடைக்கின்றது. இந்த தவறான கருத்தை கைவிடுமாறு கால்நடை நண்பர்களுக்கு சிறிய வேண்டுகோள் விடுகிறேன் கறவை மாடுகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுப்பதால் எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.

அனைத்து வகை மாடுகளுக்கும் எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம் எந்த ஒரு பாதிப்பும் வராது

எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாமா????.

Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts