கால்நடை தகவல் உதவி எண்கள்


கால்நடை சம்பந்தமான தகவல்களை பெற

Kissan Call Centre (KCC)

NDDB call centre

-

1800 180 1551

75748 35051

ரிலையன்ஸ் அறக்கட்டளை தகவல் சேவை (RFIS)

-

1800 419 8800

Department of Animal Husbandry & Veterinary Services, Karnataka (AH& VS helpline)

-

1800 425 0012

080 234 17 100

Animal Mobile Medical Ambulance (AMMA) Services- Tamil Nadu

-

1962                                            

 கால்நடை குரல், Pondicherry  - 9499047100
Share:

ஒரே நாளில் 76.61 கிலோ பால் கறந்து HF பசு சாதனை

தேசிய அளவில் அதிகப்படியான பால் கறந்த சாதனையை Galib Keri  என்ற  கிராமத்தில் உள்ள  பல்தேவ் சிங் விவசாயின்  HF பசு  24 மணி நேரத்தில் 76.61 கிலோ பால்  கறந்துள்ளது. 

இந்தப் பசு 2014 ஆம் ஆண்டு  முதன் முதலில் கன்று ஈன்ற பொழுது 42 கிலோவும், இரண்டாம் கன்று ஈன்ற பொழுது 54 கிலோவும், மூன்றாம் கன்று ஈன்ற பொழுது 62 கிலோவும் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. தற்சமயம் நான்காவது முறை கன்று ஈன்ற பிறகு இந்த புதிய சாதனையை செய்துள்ளது. மேலே கூறியுள்ளது ஒரு நாளுக்கான கறவை அளவு.

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிற்சியின் மூலம் இந்த சாதனையை அடைய முடிந்தது என்று அந்த பசுவின் உரிமையாளர் கூறினார்.


👆👆👆👆👆👆

உலக அளவில் பிரேசிலில் உள்ள Giralando பண்ணையில் உள்ள Marilia {Giralando(Gir + HF)} எனும் கலப்பின பசு ஒரே நாளில் 127.57 கிலோ பால் உற்பத்தி செய்தது கின்னஸ் உலக சாதனையாக உள்ளது (2019).


Share:

கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைய என்ன செய்ய வேண்டும்?????

அனைவருக்கும் வணக்கம் கால்நடை வளர்ப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற எங்கள் Telegram குழுமத்தில் இணையுங்கள்.
இது முழுக்க முழுக்க ஒரு தன்னார்வ சேவை

முதலில் Telegram appயை Google Play store லிருந்து பதிவிறக்கம் செய்யுங்கள் பின்பு கீழே உள்ள Telegram Link 
மூலம் குழுவில் இணைந்து பயன் பெறலாம்
Group link : 
https://t.me/jtk_kalnadainanban

Only advisory service. No treatment . கால்நடை சார்ந்த தகவல்கள் மட்டுமே. மருத்துவம் கிடையாது. 



குறிப்பு : கீழே உள்ள விதிமுறைகளை படித்து. இதை ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்.

குழுவில் இணைய
Share:

மண்ணில்லா தீவன முறையை மட்டும் நம்பி கால்நடை பண்ணை நடத்த முடியுமா????

மண்ணில்லா தீவனம் பசுந்தீவன உற்பத்தியில் ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும்.
நிலமில்லாத பண்ணையாளர்கள் பசுந்தீவன உற்பத்தியை எளிதில் செய்வதற்கான ஒரு தொழில்நுட்பமே மண்ணில்லா தீவனம்.
பல விவசாயிகளுக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் மண்ணில்லா தீவனம் மட்டுமே கால்நடை வளர்ப்பிற்கு போதுமானதா???
பசும் தீவனத்திற்கு மாற்றாக மண்ணில்லா தீவனம் பயன்படுத்தலாமே தவிர அதையே தீவனமாக பயன்படுத்துவது சரியான வழிமுறை கிடையாது.
பசுந்தீவனம் கிடைக்காத இடங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
தானியங்கி வசதிகொண்ட மண்ணில்லா தொழில்நுட்ப இயந்திரத்தால் மட்டுமே முளைகட்டும் சதவீதம் அதிகமாக காணப்படும்.
சொந்த முயற்சியில் தானியங்கி அமைப்பு கொண்டு உருவாக்கப்படும் மண் இல்லா தீவன அமைப்பு முறைகள் பெரும்பாலும் 65 முதல் 70 சதவீத உற்பத்தியை கொடுக்கின்றன இது லாபகரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
முளைகட்டும் சதவீதம் 90லிருந்து 95 சதவீதம் இருந்தால் மட்டுமே மண்ணில்லா தீவன உற்பத்தியை லாபகரமாக இருக்கும்

Share:

சினை ஊசி போட்ட பிறகு மாடுகளை கீழே உட்கார விடக்கூடாது என்பதற்கு காரணம் என்ன?????

நம் கிராமப்புறங்களில் பெரும்பாலும் மக்களிடையே இருக்கும் ஒரு தவறான கருத்து சினை ஊசி போட்ட பிறகு மாடுகளை கீழே உட்கார விடக்கூடாது. 
இப்படி நினைப்பதற்கு காரணம் மாடுகளுக்கு போடப்பட்ட சினை ஊசி கீழே ஊற்றி விடும் என்ற நினைப்பு.
மாட்டை தலைகீழாக வைத்து குலுக்கினாள் கூட இப்படி நடக்காது.
முந்தைய காலங்களில் பசுக்களை பொலிகாளை களிடம் இனப்பெருக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர். இயற்கை முறையில் காளைகள் விந்துக்களை பசுவின் அறையில் செலுத்தும்போது அதிக அளவிலான விந்து கலவை அறையில் தங்கிவிடும் மாடு கீழே அமரும்போது அது வெளிவர நேரிடும்.
இந்த எண்ணம் கொண்டுதான் சினை ஊசி போட்டால் கூட மாடை கீழே உட்கார விடக்கூடாது என்று விவசாயிகள் கருதுகின்றனர்.
சினை ஊசி போடும்போது மிக குறைந்த அளவிலான விந்து நேரடியாக கர்ப்பப்பையில் செலுத்தப்படுகிறது அதனால் மாடு கீழே அமர்ந்தாள் கூட அது வெளியில் வருவதற்கு வாய்ப்பே கிடையாது அதனால் சினை ஊசி போடப்பட்ட மாடுகள் கீழே உட்காருவதில் எந்த ஒரு தவறும் கிடையாது.
Share:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையங்களின் தொடர்பு எண்கள்



தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

கால்நடை விரிவாக்க பணிகளுக்கான கால்நடை பல்கலைக்கழகத்தின் பயிற்சி மையங்கள் மாவட்டம் வாரியாக அமைந்துள்ளன கால்நடை விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய தகவல்கள் கால்நடை சம்பந்தமான பயிற்சிகளை கீழே உள்ள தொலைபேசி எண்களை கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.




Share:

25 வயது மாடு இரண்டு கன்றுக்குட்டிகள் ஈன்றது.



25 வயது மாடு இரண்டு கன்றுக்குட்டிகள் ஈன்றது.
இயல்பாக மாடுகள் 15-20 வயது வரை வாழக்கூடியவை.
இந்தியாவை பொறுத்தமட்டில் 10 முதல் 12 கன்றுகளை ஈனும் மாடுகளை பார்ப்பதே அரிதாக உள்ளது.
ஆனால் லண்டனைச் சார்ந்த ஒரு பழமையான மாட்டுப் பண்ணையில் உள்ள 25 வயது மாடு இன்று 2 கன்றுகள் ஈன்றுள்ளது அதிசயம் என கூட சொல்லலாம்

1995 முதல் இந்தப் பசு 20 முறை கன்றுகள் ஈன்று உள்ளது.

இந்திய நாடுகளில் அதுவும் நம் தமிழ்நாட்டில்  கறவை மாடு வளர்ப்பவர்கள் அதிக பட்சம் ஒரு கறவை மாட்டை ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு மட்டுமே வைத்துள்ளனர். பசு வாங்கும்பொழுது கூட இரண்டாம் மற்றும் மூன்றாம் கன்று ஈன்றுள்ள பசுக்களை மட்டுமே வாங்குகின்றனர். அதன்பின் சினை பிடிக்காத பிரச்சனையின் காரணமாக பெரும்பாலும் மாடுகளை விற்று விடுகின்றனர்.
ஆனால் லண்டனில் சோமர்செட் என்னும் ஊரில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் 25 வயதான பசு இரண்டு  கன்றுகள் ஈன்று உள்ளது.மிகப் பெரும் அதிசயமாக கருதப்படுகிறது. 



உண்மையில் இது ஒரு அதிசய பசு தான் 





இடம்: சோமர்செட், லண்டன்
Place: Lower Thorn Farm, North Barrow, Somerset, UK.
Source : Farmers weekly, UK.
Share:

மாட்டின் கர்ப்பப்பை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்????

கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளிடையே பெரும்பாலும் காணப்படும் முக்கியமான பிரச்சனைகளில் சினை பிடிக்காத மாடுகளை பராமரிப்பது மிகவும் கடினமாகிறது.

மாடு சினை பிடிக்காததற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக தீவன மேலாண்மை அமைகிறது.
கர்ப்பப்பை சரியான வளர்ச்சி அடையவில்லை என்றால் சினை பிடிப்பது சிரமம் ஆகிறது.
கர்ப்பப்பை வளர்ச்சி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்???
1.கொண்டைக்கடலையை 200 கிராம் ஊறவைத்து முளைகட்டி அரைத்து ஏழு நாட்களுக்கு கொடுக்க வேண்டும் (அ)
2.நாட்டுக் கம்பு 100 கிராம் ஊறவைத்து முளைகட்டி அரைத்து தினசரி கொடுத்து வர வேண்டும் (அ)
3. தாது உப்பு கலவை 30 கிராம் தினசரி தீவனத்துடன் கொடுத்து வரவேண்டும்(அ)
4. சமச்சீர் தீவனம் என்று அழைக்கப்படும் பசுந்தீவனம் உலர்தீவனம் மற்றும் அடர்தீவனம் ஆகிய மூன்றும் சரியான அளவு தினசரி கொடுக்கப்படவேண்டும்.(அ)
5. முக்கியமாக இவை அனைத்தையும் செய்வதற்கு முன்னர் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.


Share:

பிறந்த கன்று குட்டியின் வாயில் இருந்து எச்சில் வடிவதற்கு காரணம் என்ன???

இயல்பாக மாடுகளுக்கு 4 உணவுப் பைகள் இருக்கும்.
கன்று பிறந்த 21 நாட்களில் இருந்து அதன் உணவுப் பைகள் விரிவடையத் தொடங்கும்.
இதுபோன்ற நேரங்களில் அசைபோடுவதின் முக்கியத்துவம் கன்று குட்டிகளின் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இதனால் சில கன்றுகுட்டி களில் அசை போடும் பொழுது அதிகமாக எச்சில் சுரக்க வாய்ப்புள்ளது.
இது இயல்பான ஒரு நடவடிக்கை தான் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்.
சில கன்று குட்டிகள் உட்கொண்ட தீவனம் செரிமானம் ஆகாமல் அசை போடும்போது அப்படியே வெளியே தள்ளி விட நேரிடும்.
 கன்று குட்டிகள் வாந்தி எடுத்தது போல் தோன்றும்.
இதுவும் இயல்பானதுதான் உணவுப்பை விரிவடைவதற்குகான அறிகுறியே இது காட்டுகிறது.
 இரண்டு மூன்று நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும்

குறிப்பு: தொடர்ந்து இதுபோல் இரண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது
Share:

கால்நடைகளை நாய் கடித்தால் என்ன செய்வது????

கால்நடைகளை தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் கடிப்பது இயல்பாக காணப்படுகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது கன்று குட்டிகள், ஆடுகள் மற்றும் கோழிகள்.
நாய் கடித்தால் விஷம் என்ற பயம் தேவையில்லை
கால்நடைகளை கடித்தது வெறிநாய்க்கடி நோய் பாதிக்கப்பட்ட (Rabies)நாயாக இருந்தால் மட்டுமே பயம் வேண்டும். பாதிக்கப்பட்ட நாயாக இருந்தால் மட்டுமே நோய் பரவும்.
வெறிநாய்க்கடி நோய் என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் வெறித்தனமாக சுற்றித்திரிந்து அருகில் உள்ள அனைத்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை கடிக்க முற்படும். 
இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் 10 நாட்களுக்குள் உயிரிழக்க நேரிடும்.
இப்படி நாம் வளர்க்கும் கால்நடைகளை நாய்கள் கடிக்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்????
1.கடித்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்வது அவசியம் 2.காயத்தை வெயில் படும்படி காய வைப்பது அவசியம் 3.உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று நோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக அவசியம்.
நாய்க்கடியின் தாக்குதலை பொருத்து எத்தனை ஊசிகள் போட வேண்டும் என்பதை கால்நடை மருத்துவர் முடிவு செய்வார்.

வெறிநாய் கடி நோய் தடுப்பூசியால் மட்டுமே தவிர்க்க முடியும்.

 இந்த நோய் 100% குணப்படுத்த முடியாத நோய் ஆனால் 200% எளிதில் தடுக்கக்கூடிய நோய்.



தடுப்பூசி போடுவோம் !!!!கால்நடைகளைக் காப்போம்!!!
Share:

நஞ்சுக்கொடி /சத்தை/ உறுப்பு போடவில்லை என்றால் என்ன செய்வது???

ஹாஹா என் மாடு கன்று ஈன்றது என்று ஆனந்தத்தில் இருக்கும் கால்நடை நண்பன் சில நேரம் கழித்து ஐயோ என் மாடு இன்னும் நஞ்சுக்கொடி போடவில்லை என்று புலம்புவதை அதிகம் கேட்டிருக்கிறோம்.

இந்த புலம்பலின் காரணத்தையும் கட்டுப்படுத்தும் வழிகளையும் காண்போம்
நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பைக்கும் கன்றுகுட்டிக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகமாகும். இது கரு தோன்றிய முதல் கர்ப்பப்பையுடன் இணைந்தே இருக்கும். இது கன்றுக்குட்டிக்கு தகுந்த பாதுகாப்பை  சினைக்காலம் முழுவதும் வழங்கி வருகிறது . கன்றுக்குட்டிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில்  பார்த்துக் கொள்வது இந்த நஞ்சுக்கொடியின் வேலை. ஊட்டச்சத்தை மட்டும் அளிக்காமல் கன்றுக்குட்டியின் கழிவையும்  தேக்கி அப்புறப்படுத்துவது இதன் வேலையாகும். சினை காலம் முடிந்த உடனே எவ்வாறு கன்றுக்குட்டியை மாடு வெளியேற்றுகிறதோ அதேபோலவே நஞ்சு கொடியையும் வெளியேற்ற பட வேண்டும். பொதுவாக சத்தான மாடுகள் அரை மணி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடியை போட்டுவிடும்.
நஞ்சுக்கொடி தங்குவதற்கு சமச்சீர் தீவனம் அளிக்காததும் ஒரு காரணம்.
முதலுதவி:
• 1 கிலோ வெண்டைக்காயை  நறுக்கி   கன்று ஈன்ற மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
• 1 தேங்காய் முடி துருவி  அத்துடன் 15 cm  நீளம் உள்ள 4 முள்ளங்கியை 100 கிராம் வெல்லத்துடனும் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு வேலையாக மூன்று நாட்களுக்கு கொடுத்து வர வேண்டும்.
• கன்றை விட்டு பால் குடிக்க வைக்க வேண்டும்
குறிப்பு;
6-8 மணி நேரத்திற்கு மேலும் நஞ்சுக்கொடி போட வில்லை என்றால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
இ.இளையராஜா

Share:

கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

நடைமுறையில் விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் மாடுகளில் சினைப் பிடிக்காத பிரச்சனையை பற்றி நம் குழுவில் பயணிக்கும் விவசாயி வி.ரமேஷ், புதுச்சேரி இந்த கவிதையை எழுதியுள்ளார். ஒரு மாடு தன் உரிமையாளரை பார்த்து கேட்பது போல்  இது அமைந்துள்ளது

நடைமுறையில் விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் மாடுகளில் சினைப் பிடிக்காத பிரச்சனையை பற்றி கவிதையாக நான் (Dr.JTK) எழுதி உள்ளேன். ஒரு விவசாயி இந்த கவிதையை எழுதுவது போல் இது அமைந்துள்ளது
Share:

மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்




1)வேளாண் அறிவியல் நிலையம்,
திரூர் – 602 025
திருவள்ளூர் மாவட்டம்
தொலைபேசி :044 - 27697394
தொலை நகல்:044 - 27620705

2)வேளாண் அறிவியல் நிலையம் KVK
கட்டுப்பாக்கம் – 603 203.
கட்டன் கொளத்தூர் அஞ்சல்
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி :044 - 27452371

3)வேளாண் அறிவியல் நிலையம்,
விரிஞ்சிபுரம் – 632 104
வேலூர் மாவட்டம்
 தொலைபேசி :0416 - 2272221

4)வேதபுரி வேளாண் அறிவியல் நிலையம் கில்நேலி கிராமம்,
சித்தத்தூர் (அஞ்சல்),
செய்யூர் – 604 410.
திருவண்ணாமலை மாவட்டம்
தொலைபேசி :04182 - 247271

5)டாக்டர். பெருமாள் வேளாண் அறிவியல் நிலையம்
எலுமிச்சங்கிரி கிராமம்,
மல்லிநாயனப்பள்ளி அஞ்சல்,
கிருஷ்ணகிரி – 621 313. 
தொலைபேசி :04343 - 268613

6)வேளாண்மை அறிவியல் நிலையம்
மாநில விதை பண்ணை
பாப்பாரபட்டி - 636 809
தர்மபுரி மாவட்டம்.
தொலைபேசி - 04342 - 248040

7)வேளாண்மை அறிவியல் நிலையம்
சந்தியூர் - 636 203
மல்லூர் (வழி)
சேலம் மாவட்டம் 
தொலைபேசி -0427 - 2422550

8)வேளாண்மை அறிவியல் நிலையம்
விருத்தாசலம் - 606 001
கடலூர் மாவட்டம் 
தொலைபேசி -04143-238353

9)ஹான்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் நிலையம்
வலிக்கன்டபுரம்,
பெரம்பலூர் – 621 115.
தொலைபேசி :04328 - 293251,293592

10)வேளாண் அறிவியல் நிலையம் KVK
கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம்,
நாமக்கல் – 637 002.
 தொலைபேசி :04286 - 266345

11)மைரடா வேளாண் அறிவியல் நிலையம் 57, பாரதி தெரு,
கோபிச்செட்டிபாளையம் – 638 452.
ஈரோடு மாவட்டம் 
தொலைபேசி : 04285 - 226695

12)அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம்,
விவேகானந்த புரம் – 641 113.
சிலியூர் (வழி), காரமடை பிளாக்,
கோவை மாவட்டம்.
தொலைபேசி :04254 - 284223

13)வேளாண் அறிவியல் நிலையம்,
சிறுகமணி – 641 113
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொலைபேசி :0431 - 2614417

14)பக்தவச்சலம் நினைவுக் குழு வேளாண் அறிவியல் நிலையம்
உசிலம்பட்டி (அஞ்சல்),
சென்சிப்பட்டி வழி,
தஞ்சாவூர்.
தொலைபேசி :04362 - 221474

15) வேளாண் அறிவியல் நிலையம்,
காந்திகிராம் கிராமப்புற நிறுவனம்,
காந்திகிராம் - 624 302.
திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி :0451 - 2452168

16)வேளாண்மை அறிவியல் நிலையம்
தேசிய பயிர் வகை ஆராய்ச்சி மையம்
வம்பன் காலனி P.O.
புதுக்கோட்டை
 தொலைபேசி - 04322 - 290321

17) வேளாண்மை அறிவியல் நிலையம்
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மதுரை - 625 104
தொலைபேசி -0452 - 2422955

18)வேளாண் அறிவியல் நிலையம் KVK
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்
குன்றக்குடி – 630 206.
சிவகங்கை மாவட்டம் 
தொலைபேசி : 04577 - 264288

19)சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம் மேற்குத் தெரு,
காமாட்சிபுரம் (எஸ். ஓ)
தேனி மாவட்டம் – 625 520. தொலைபேசி :04546 - 247564

20) வேளாண் அறிவியல் நிலையம்
கோவிலாங்குளம்
அருப்புகோட்டை - 626 107
விருதுநகர் மாவட்டம்..
தொலைபேசி :04566 - 220562

21)வேளாண்மை அறிவியல் நிலையம்
கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம்
ஆட்சியார் அலுவலக வளாகம்
இராமநாதபுரம் மாவட்டம்.. தொலைபேசி -04567 - 230250

22)ஸ்கேட் வேளாண் அறிவியல் நிலையம் முடிவைத்த
நென்டல் (அஞ்சல்)
வாகைக்குளம் – 628 102.
தூத்துக்குடி மாவட்டம் 
தொலைபேசி :0461 - 2269306

23) ஆர். வி. எஸ். வேளாண் அறிவியல் நிலையம் ஊர்மேல் அழகியன் (பி பி ஓ)
ஆயுர்குடி (அஞ்சல்),
தென்காசி – 627 852.
திருநெல்வேலி மாவட்டம். 
தொலைபேசி :04633 - 240550

24)வேளாண்மை அறிவியல் நிலையம்
பேச்சிபாறை - 629 161
கன்னியாகுமரி மாவட்டம் 
தொலைபேசி - 04651 - 281192

25)வேளாண் அறிவியல் நிலையம்,
நீடாமங்கலம் – 614 404
திருவாரூர் மாவட்டம் 
தொலைபேசி :04367 - 260666

26) வேளாண்மை அறிவியல் நிலையம்
சிக்கல் - 611 108
நாகப்பட்டினம் மாவட்டம் 
தொலைபேசி :04365 -246266

27)வேளாண் அறிவியல் நிலையம்
Patchaimalagam No.23, Aranganatha Nagar 
Near Chinna Market Chidambaram Cuddalore District, TamilNadu
தொலைபேசி :04331-290335
Share:

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கான விவசாய கடன் அட்டை (Kisan Credit Card)

விவசாய கடன் அட்டை திட்டம் இந்திய வங்கிகளால் 1998-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம் ஆகும். விவசாயம் மற்றும்  கறவை மாடு வளர்ப்போர் தேவைக்கேற்ப குறுகிய கால கடன்கள் மற்றும் நீண்ட கால கடன்கள் வழங்கப்படுகிறது. மீண்டும் தற்பொழுது, இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1.5 கறவை மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் பால் கூட்டமைப்புகள் மற்றும் கூட்டுறவு மையங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்ற சிறப்பு முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் குறிக்கோள்:
 குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கும் கறவை மாடு வளர்ப்போர்களுக்கும் கடன் வழங்க வேண்டும்.
*இந்தத் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்ப்போர் 3 லட்சம் வரை ஈட்டுறுதி(insurance) அடிப்படையில் கடனாகப் பெறலாம். 1.6 லட்சம் வரை கடனாக பெறுவதற்கு எந்த ஈட்டுறுதியும் வேண்டாம். 
*7% வட்டியுடன் கடன் பெறலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். உரிய காலத்திற்குள் கடனைத் சரியாக திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீதம் மானியமாக வங்கி கணக்கில் கொடுக்கப்படும்.
*அருகிலுள்ள பால் கூட்டுறவு மையம் அல்லது சேமிப்பு கணக்கு உள்ள வங்கி அல்லது கால்நடை மருத்துவமனையில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாய கடன் அட்டையை பெறலாம்.
*கடன் அட்டை கணக்கில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.
கடன் பெறுவதற்கான தகுதிகள் (Eligiblity):
*விவசாயம் அல்லது கறவை மாடு வளர்ப்போர் அனைவரும் விவசாயக் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
* குறைந்தபட்ச வயது : 18 வயது
   அதிகபட்ச வயது : 75 வயது
*விவசாயக் கடன் பெறுவோர் 60 வயதிற்கு மேல் உள்ளவராக இருந்தால், விவசாயக்கடன் பெறுவோரின் சட்டபூர்வமான வாரிசாக இருப்பவர் இணைந்து( co- borrower) கடன் பெற வேண்டும்.
*விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின்படி குறைந்த வட்டி விகிதத்தில் கடனை பெற்று, கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் அடைவோம்.
*விவசாய கடன் அட்டையின் மூலம் பெரும் கடனை 5  வருடத்திற்குள் செலுத்த வேண்டும். ஐந்து வருடத்திற்குள் கடனை செலுத்த முடியாதவர்களுக்கு  ஒரு வருட காலம் கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்கப்படும்.

சு.மகேஷ்வரி

கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவி

ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

புதுச்சேரி-09.



Share:

மாடுகளின் கண்களில் நீர் வடிவதற்கு-காரணம் என்ன?????

மாடுகளின் கண்களில் நீர் வடிவதற்கு பல காரணங்கள் உண்டு இது சில சமயங்களில் இரு கண்களிலும் காணப்படும் அல்லது ஒருபுறம் மட்டும் காணப்படும்.
 மாடுகளுடன் ஒப்பிடுகையில் கன்று குட்டிகளுக்கு அதிக அளவில் நீர் வடிவதை காணமுடியும் அதனுடைய காரணங்களையும் முதலுதவியையும்  பற்றி காண்போம்.
காரணங்கள்
• தூசு, துரும்பு (பொதுவாக ஒருபுறம் மட்டும் நீர்வடியும் )
• நோய்த்தொற்று (இருபுற கண்களிலிருந்தும் நீர் வடியும்)
• மூக்கணாங்கயிறு சரியாக இல்லாத போது
• கண்களில் இருக்கும் புழுக்கள்
•சத்துக் குறைபாடு
• கண்களைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பதால்

முதலுதவி:
   ஒரு கை பிடி அளவிற்கு கல்லுப்பை  ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கழுவி வந்தால் நீர் வடிவது குறையும்

செய்யவேண்டியவை
• தூசு ,துரும்பாக இருந்தால் மேலே கூறிய படி செய்துவந்தால் குணமாக  அதிக வாய்ப்புள்ளது .
• மூக்கணாங் கயிற்றால் நீர் வடிகிறது என்றால் மூக்கணாங்கயிற்றை சரிசெய்யவேண்டும்.
• கண்களில் புழுக்கள் இருந்தால் அதை மருத்துவரின் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
• சத்துக் குறைபாடு என்றால்  தினசரி 30 கிராம் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கொடுக்க வேண்டும்/  தினசரி 100 கிராம் முளை கட்டிய தானியத்தை அரைத்து கொடுக்க வேண்டும்.


குறிப்பு:
மூன்று நாட்களுக்கும் மேலாக நீர் வடிகிறது என்றால் கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

படைப்பு
இ.இளையராஜா
கால்நடை மருத்துவ பட்டப் படிப்பு மாணவர்
Share:

இயற்கை முறையில் உண்ணிகளை ஒழிப்பது எப்படி????

மாட்டின் கோமியத்தை பிடித்து வைத்து அதில் சோற்றுக்கற்றாழை சேர்த்து ஒரு நாள் முழுதும் ஊறவைத்து மறுநாள் அந்தக் கலவையை எடுத்து உண்ணிகள் இருக்குமிடத்தில் தடவினால் உண்ணிகள் கொட்டிவிடும். 
தகவல்: ஸ்ரீனிவாசன்

தேவையான அளவு தும்பைப் பூவை எடுத்து அதை அரைத்து உண்ணி இருக்கும் இடத்தில் தடவி வரலாம்.
வேப்ப எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் இவை இரண்டும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து உண்ணி இருக்கும் இடத்தில் தடவி வரலாம். 
 மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் கால்நடை வளர்ப்பவர்களால் பயன்படுத்தப்பட்டு பலன் கிடைத்த வழிமுறைகளாகும்.


உன்னி மருந்து மாட்டுக் கொட்டகையை சுற்றி உள்ள இடங்களில் தான் அடிக்க வேண்டும். மாட்டுக்கொட்டகையின் உள்ளே அடிக்க சொல்லவில்லை.
 4 மூலைகளிலும் முக்கியமாக அடிக்கவேண்டும்.
அதுவும் கால்நடைகள் இல்லாத சமயத்தில் அடிக்கவேண்டும்.

குறிப்பு: இது மாட்டின் மேல் இருக்கும் உண்ணிகளை மட்டுமே நீக்கும். மாடு, மாடுகளை கட்டும் இடம், மாட்டுக் கொட்டகை ஆகிய மூன்று இடங்களையும் சுத்தப்படுத்தினால் மட்டுமே முழுமையாக உண்ணிகளை ஒழிக்க முடியும்.

Share:

பருத்திக்கொட்டை, பருத்தி புண்ணாக்கு மாடுகளுக்கு எந்த அளவில் கொடுக்க வேண்டும்?????

பருத்திக்கொட்டை மற்றும் பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
பருத்தி கொட்டையாக கொடுக்கும் போது ஊறவைத்து அரைத்து கொடுக்க வேண்டும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை கொடுக்கலாம்.
பருத்திக் கொட்டையை அதிகமாகக் கொடுக்கும் போது அதிலிருக்கும் நச்சுத்தன்மையை மாடுகளை பாதிக்கும்.
பருத்தி புண்ணாக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை கிலோ வரை பெறலாம் ஆனால் கால் கிலோ அளவு கொடுப்பது நல்லது.
பருத்திக் கொட்டையை  பஞ்சோடு சேர்த்து கொடுப்பதை தவிர்க்கவும்.
பஞ்சை நீக்கிவிட்டு பருத்திக் கொட்டை மட்டும் எடுத்து ஊற வைத்து அரைத்துக் கொடுக்க வேண்டும்.
Share:

"விலங்கிய நோய்கள்" அல்லது "விலங்கு வழி பரவும் நோய்கள்" (Zoonotic diseases)

நம் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு வகையில் விலங்குகளுடன் தொடர்பு கொள்கிறோம். இது இப்பொழுது ஆரம்பித்த பழக்கமல்ல. பழங்காலத்தில் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த  காலம்தொட்டே விலங்குகளை உணவுக்காகவும், வேட்டையாடவும் வளர்த்து வந்தான்.  அவற்றுள் செம்மறி ஆடும், நாயும் முதலில் வளர்க்கப்பட்டது. அப்பொழுது மனிதனுக்கும் விலங்குக்கும் ஏற்பட்ட இணைப்பு, இன்று மனிதர்களை அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர் என்று கூறுவதைவிட அவர்களின் பெற்றோர் (Pet Parents) எனக் கூறும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டது.

" இயற்கை என்றாலும் உறவு என்றாலும் அழகு என்றால், ஆபத்து இருக்கத்தானே செய்யும்!!!"

அப்படி ஒன்றுதான் "விலங்கிய நோய்கள்" அல்லது "விலங்கு வழி பரவும் நோய்கள்" (Zoonotic diseases). இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குக்கும் பரவக்கூடியது. இந்த நோய்களுக்கான காரணிகள் நுண்ணுயிரி போன்ற பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் உண்ணி போன்றவை ஆகும். அதிக பாதிப்பில் உள்ள மக்கள்: கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள்,  இறைச்சி வெட்டுவோர், கால்நடை வளர்ப்போர். சமீபத்தில் மனிதர்களுக்கு தோன்றும் நோய் தொற்றுகளில் 60% விலங்கு வழி பரவும் நோய்கள் என கூறப்படுகிறது.  விங்கிய நோயால் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றது. மனிதன் பொருளாதார சரிவையும் சந்திக்கிறான். விலங்கிய நோய் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு நிபா வைரஸ் ஒரு எடுத்துக்காட்டே. இன்று நாம் அனைவரும் வீட்டில் இருப்பதற்குக்கூட இதுதான் காரணம். விலங்கிய நோயில் பலவகை உண்டு. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் - வெறிநாய்க்கடி நோய் (Rabies). மனிதர்களிடமிருந்து விலங்குக்கு பரவக்கூடிய நோய்கள் - காசநோய்(Tuberculosis). மண் மற்றும் பறவைகளிடமிருந்து பரவக்கூடிய நோய்கள் - பூஞ்சை தொற்று( Histoplasmosis).

இப்படி, நோய் பல இருக்கலாம்; பரவும் வழிகளும் பல இருக்கலாம்; ஆனால் கால்நடை மருத்துவர்கள் தங்கள் பிரம்மாஸ்திரம் கொண்டு நோய் பரவுவதை தடுக்க தானே செய்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் அறிந்த ஒரு நோய்தான் Rabies என்று சொல்லக்கூடிய வெறிநாய்க்கடி நோய். இதைப்பற்றி ஒரு குறிப்பும் அதை கால்நடை மருத்துவர்கள் எப்படி மனிதர்களுக்கு பரவாமல் இருக்க தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று பார்ப்போம். ரேபிஸ் ஒருவகையான வைரஸ் மூலம் பரவக்கூடிய நோய். இது, பாதிக்கப்பட்ட நாய் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் கடித்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட நாயின் உமிழ் நீர் காயங்களில் பட்டாலோ நோய் தொற்று ஏற்படும். அந்த வைரஸ், காயம் ஏற்பட்ட இடத்தில் பெருகி நரம்பு மண்டலத்தை அடைகிறது. பின் மூளையை அடைந்து நரம்பு மண்டலம் மூலமாகவே பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர் வழியாக வெளியேறுகிறது. நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே உமிழ்நீரில் வைரஸ் வெளியேறுகிறது. நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி (Incubation period according to WHO) ஒரு வாரத்தில் இருந்து ஒரு வருடம் வரை. நோய் அறிகுறிகள் சீற்றம்(furious) மற்றும் முடக்கம் (dumb) என இரண்டு வகையாக வெளிப்படுத்தப்படுகிறது. நோய்க்கான அறிகுறிகள் காய்ச்சல், தசைப்பிடிப்பு, அதிகமாக உமிழ் நீர் வழிதல், நீர் பயம், ஒளி பயம்,  பக்கவாதம், கோமா மற்றும் மரணம் ஏற்படும். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை ஆனால் 100% தடுக்க இயலும். நாய் கடி ஏற்பட்ட உடனே காயம் ஏற்பட்ட இடத்தில் சோப்பு போட்டு கழுவி, மருத்துவரை அணுகி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் இந்நோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். விலங்கிடமிருந்து மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட வைரஸ் கிருமியை விலங்கிடமே தடுக்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

நோய் தடுப்பு முறையாக முதலில் அரசு மருத்துவமனையில் அல்லது தனியார் சிகிச்சையக்கத்தில் வரும் நாய்களுக்கு தடுப்பூசி போடுதல். நோயிற்கான அறிகுறிகள் தெரிந்த நாய் சிகிச்சைக்காக வந்தால் அதை தனிமைப்படுத்தி மாதிரி சேகரித்து (Sample collection) ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அனுப்புகின்றனர். நோய்த்தொற்று இருந்தால் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். பின்பு நோய்த்தொற்று ஏற்பட்ட அந்த ஊருக்கோ அல்லது நகரத்திற்கோ கால்நடை மருத்துவர்கள் சென்று அங்குள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். அதன்மூலம் அந்த  ஊரில், மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் பாதுகாக்கின்றனர், நம் கால்நடை மருத்துவர்கள். மேலும்,  தெருவில் பாதுகாப்பின்றி இருக்கும் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு(Animal Birth Control) செய்தும் ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்கின்றனர். நோய்த்தொற்று பற்றி கால்நடை வளர்ப்போருக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்பதில் சிறந்த பங்கு வகிக்கின்றனர்.

இவ்வாறு, விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கின்றனர், கால்நடை மருத்துவர்கள். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டே. மற்ற விளங்கிய நோய்கள் பரவாமல் இருக்க அந்த நோய் கிருமிகளின் வீரியத்தை அறிந்து அந்த நோய்த்தொற்றுக்கு ஏற்ப புதிய உத்திகளையும் கையாளுகின்றனர்.

மண்ணை நாடிய தாவரம்; தாவரத்தை நாடிய கால்நடை; கால்நடையை நாடிய மனிதன்; இந்த சூழற்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதில் மனிதன் மட்டும் பயனையும் அடைந்து பாதிப்பையும் ஏற்படுத்துகிறான். ஒரு தருணத்தில் இரண்டு இயற்கை அன்னையும் தன் மகனை தண்டிக்க தான் செய்கிறாள் இயற்கை பேரிடர் மூலமாகவும் நோய்த்தொற்று மூலமாகவும். ஆம்!!!!தண்டிக்கவும் செய்கின்றாள் மருத்துவர்கள் மூலம் மருந்தாற்றவும் செய்கிறாள். விலங்கு வழி பரவும் நோய்க்கு அதிக பாதிப்பில் உள்ளவர்களும் கால்நடை மருத்துவர்கள் தான் அதை பரவாமல் தடுப்பதும் கால்நடை மருத்துவர்கள் தான். அவர்களின் பணி சிறப்பாக அமைய ஒத்துழைப்பு அளிப்போம்.

 

சு.மகேஷ்வரி

கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவி

ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

புதுச்சேரி-09.

 

 


Share:

கால்நடை மருத்துவர்களின் பங்கு

மருத்துவத்துறையில் கால்நடை மருத்துவம் ஒரு தனி இடத்தை  பிடித்துள்ளது. விலங்குகள் இரண்டு வகை படும் ஒன்று சிந்திக்க தெரிந்த விலங்கு (மனிதன்) மற்றொன்று சிந்தனை இல்லாத விலங்கு. இது அனைத்து நிலம் வாழ் ஜீவராசிகளையும்  குறிக்கும்.  ஒரு கால்நடை மருத்துவராக இந்த சமூகத்தில் எண்ணிலடங்கா பல பணிகள் செய்து வருகின்றனர். ஆனால் இவை அனைத்தும் பார்வைக்குப் புலப்படாமல் உள்ளன. இதற்காகவே பொது மக்களுக்கு இடையே கால்நடை மருத்துவரின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
ஒரு மருத்துவராக கால்நடை மருத்துவர் கிராமப்புறங்களில் சிகிச்சை பார்ப்பது கிராமங்களில் வாழும் மக்களுக்கு மகத்தான சேவைகளை அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற வழி வகுக்கிறது. ஒரு விவசாயி எப்படி விவசாயம் செய்து நாட்டுக்கு உணவு வழங்குகிறார்களோ அதேபோல் ஆடு, மாடுகள், கோழிகள், முலம் கிராமத்து மக்கள் வாழ்வாதாரம் உயர கால்நடை மருத்துவர் சிகிச்சை  பார்த்து அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.
வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை  பார்ப்பது இப்போது சாதாரண விஷயமல்ல.பாம்புக்குக் கால்கள் கிடையாது, மீனுக்கு இறைப்பை கிடையாது, நத்தைக்கு முடி கிடையாது, நண்டுக்கு கழுத்து கிடையாது, இதெல்லாம் இருந்தும் மனிதன் சரியே கிடையாது. இப்பொழு  செல்லப்பிராணி வைத்திருப்போர் இணையத்தளத்தில்  அரைகுறையாக படித்துவிட்டு மருத்துவர்கள் இடம் வாதாடுகின்றனர். இவர்களுக்குப் புரிய வைப்பதும் இப்போது மிகப் பெரிய கடமையாக மாறிவிட்டது.
இவை மட்டுமல்லாமல் மனிதர்களால் வேட்டையாடப்படும் காட்டு மிருகங்களுக்கும் வைத்தியம் பார்க்கப் படுகின்றன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டு உயிரியல் பூங்கா, தேசிய பூங்காக்கள் போன்ற இடங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
பல அரசு (IVRI,NDRI,CCMB,CDRIetc..) மற்றும் தனியார் நிறுவங்களின் மூலம் உணவு பாதுகாப்பிற்கான ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
நவீன தொழிலுலகில் கால்நடை மருத்துவர்கள் , கால்நடைகளுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்திசெய்வதிலும், அதை பரிசோதித்து ஆராய்ச்சிசெய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.
உணவு பாதுகாப்பு இப்போது வளர்ந்து வரும் மிகப்பெரிய சவாலாக திகழ்கின்றன. ஒருபுறம் இதற்காக விவசாயமும் மறுபுறம் கால்நடைத் துறையும் ஈடுகட்டி செயலாற்றுகின்றன. ஒரு மாட்டிற்கு சுத்தமான உணவு அளிப்பது முதல் ஒரு மனிதன் சுத்தமான உணவு உண்ணும் வரை கால்நடை மருத்துவரின் பங்களிப்பு உள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உற்பத்தியும் பெருகி அந்த உணவை சுத்தமாக அளிப்பது வரை பல வழிமுறைகள் செயலாற்ற படுகின்றன.
பால், இறைச்சி மூலம் பரவக்கூடிய நோய்களும் உள்ளன. பால்  pasteurization process பிறகே விற்பனைக்கு வருகின்றன. இறைச்சிகள் கால்நடை மருத்துவரால் அறுக்கப்படுவதுற்கு முன்னும் பின்னும் பரிசோதிக்கப்பட்டு (ante mortem &post mortem inspection) பிறகு விற்பதற்கும் ஏற்றுமதிக்கும் அங்கீகரிக்க படுகின்றன.
இது மட்டுமல்லாமல் இன்னும் எண்ணிலடங்கா பல துறைகளில் எங்களது பங்களிப்பு உள்ளன. ஆனால் இந்த சமூகம் எங்களை மாட்டு டாக்டர் என்றே அழைக்கின்றனர். இதனால் எங்களுக்கு வேதனை அல்ல. இவ்வளவு பணியாற்றினாலும் எங்களது பணியை ஒரே வார்த்தையில் சுருக்கி விட்டீர்கள் என்ற வருத்தம்தான். நாங்கள் ஒரு கால்நடை மருத்துவர்கள் என்று கூற கௌரவமும், கர்வமும் கொண்டுள்ளோம்.
மனிதன் தனக்கு ஏற்பட்ட வலியையும் காய்ச்சலையும் மருத்துவரிடம் விவரிக்க முடியும் . எங்கள் நோயாளி பாவம் வாய்  பேச முடியாது . அனால் நன்றியோடு இருக்கும் என்பதில் எங்களுக்கு என்று சந்தேகமே இல்லை . கால்நடை மருத்துவராக நான் மிகவும் பெருமை படுகிறேன்.


Dhanvandhini.B
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவி
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி-09.

Share:

கலாச்சாரமும்!!!!கறவை மாடுகளும்!!!! காலகாலமாக மனிதனோடு சேர்ந்து வாழ்ந்து வந்த கறவை மாடுகள் நமக்கு உற்ற நண்பனாகும்


பண்பாடு பணிந்து!!!!

பாரம்பரியம் பறந்து!!!!

கலாச்சாரம் கலைந்து!!!!

தொழில்நுட்பம் மலர்ந்து!!!!

விஞ்ஞானம் வளர்ந்து!!!!

மெய்ஞ்ஞானம் தொலைந்து!!!!

பலஆண்டுகாலம் கழிந்து!!!!

சமுதாய முன்னேற்றும் விரைந்து!!!!

மனிதநேயம் இறந்து!!!!

புதுநாகரிகம் பிறந்து !!!!

இப்படி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்த்துவிட்டன. ஆனால் சில வழிமுறைகள் நம் பராமரியத்தில் பின்னி பிணைத்து விடுகின்றன. அதில் கால்நடை வளர்ப்பும் ஒன்று.  

இப்படி பரவிக்கிடக்கும் பல்வேறு கலாசாரங்களை பார்க்கும்போது கால்நடைகளுக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. அதில் கறவைமாடுகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.  சிந்து சமவெளி நகரத்தில் கறவை மாடு வளர்க்கப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளது. மனிதர்கள் தொன்று தொட்டு பசுக்களை வளர்த்து வந்ததை காட்டுகிறது. கீழடியிலும் மாடுகள் வளர்க்கப்பட்ட சான்றுகள் உள்ளன. ஹரப்பா காலம்தொட்டு மாடுகள் வளர்க்கப்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. அசோகா அரசர் வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய மாட்டு மந்தைகள் இருந்ததாகவும் அதை அடிக்கடி பார்வையிட அரசர் சென்றதாகவும் சான்றுகள் உள்ளன. அப்பொழுதே பாலை கொண்டு பல வகையான பால் பொருட்கள் செய்யப்பட்டதற்கான சான்றுகளும் இருக்கின்றன.

விவிலியத்தில்  மாட்டின் மடியில் உள்ள நான்கு காம்புகள், நான்கு நதி௧ளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.அந்த நதிகளே எல்லோரையும் வாழ வைத்ததாகவும் கூறப்படுகின்றன.

எகிப்தியர் முறைபடி தாய் ஹதோர்(mother hathor)புனித பசுவாக கருதப்பட்டது. அதன் மடியில் இருந்தே  அகண்டம் (milky way)   வந்ததாகவும், அதுவே தினமும்  சூரியனுக்கு பிறப்பு கொடுப்பதாகவும் கருதப்பட்டுள்ளது.

ரோமானியர்கள் மாட்டின் கொம்பினை அள்ளி தரும் கடவுள் horn of plenty என்று அழைத்தனர்.

 முதலில் அதை இறைச்சிக்காக வளர்த்தாலும் பின்னர் அதை தெய்வமாக கருதி வளர்க்க ஆரம்பித்தனர். இந்தியாவில் உள்ள 60 சதவீதம் பேர் இன்றும் கறவை மாடு வளர்ப்பை தங்கள் வாழ்வாதாரம் தரக்கூடிய தொழிலாக செய்து வருகின்றனர். கறவை பசுக்களை ஏழைகளின் நடமாடும் வங்கிகள் என்று கூறலாம்.

மாடுகளில் இருந்து பெறப்படும் பால்,சாணம்,கோமியம், நெய், தயிர்  ஆகியவை மக்களுக்கும்,விவசாயத்துக்கும் பெரியளவில் உபயோகப்படுகின்றன. பஞ்சகவ்வியம் இயற்கை விவசாயத்தில் பெரும் பங்கு அளிக்கிறது.

உழவு தொழிலுக்கு உற்ற நண்பனாக நம் காளைகளை பயன்படுத்தி அதற்கு நன்றி கூறும் வகையில் மாட்டு பொங்கல் என்று தனியாக ஒரு தினம் ஒதுக்கி மாடுகளை நாம் கொண்டாடுவதை நாம் இன்றும் பார்க்கமுடிகிறது. தமிழ் நாட்டில் பேர் போன ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய  காங்கேயம் , புலிக்குளம் மற்றும் உம்பளாச்சேரி காளைகளுக்கு பெருமை சேர்க்கிறது. 

கர்நாடகத்தில் கம்பாளா  என்ற திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் எருதுகளை கொண்டு தண்ணீரில் ஓட்டப்பந்தயம் வைக்கப்படுகிறது. 

வடநாட்டில் கோவர்த்தன பூஜை நடத்தப்படுகிறது. இதில் மாட்டின் சாணத்தை கொண்டு உணவு கிடைப்பதால் அதற்கான நன்றி செலுத்தும் பூஜையாக இது கொண்டாடப்படுகிறது.

நேப்பாளத்தில் வருடம் ஒரு முறை வீதிகளில் மந்தை மந்தையாக மாடுகளை கொண்டு வந்து அவர்களின் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கஜித்ரா(Gaijatra) என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.

கோமாதா/காமதேனு என்று அழைக்கப்படும் சுரபி எனப்படும் பசு எல்லா மாடுகளுக்கும் தாயாக கருதப்படுகின்றன. இந்த பசு என்ன வேண்டுமானாலும் அளிக்கக்கூடியது என்றும், இது சண்டை போடும் திறன் வாய்ந்தது மட்டுமின்றி இதனின் உடலில் வெவ்வேறு  தெய்வங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

என்னதான் பணப்புழக்கம் அதிகரித்து அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினாலும், இன்றைக்கும் புதுமனை புகுவிழா அன்று பசுவும் அதன் கன்றும் வீட்டுக்குள் முதல் அடியை எடுத்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்படுகிறது.

காளை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு ,மஞ்சு விரட்டு போன்ற பல வீர விளையாட்டுகள் உள்ளன.

இவைகள் அனைத்தும் மனிதர்கள் வீரத்தை மட்டும் போற்றாமல் அந்த காளை இனத்தை காக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்த விளையாட்டுகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே “ஏறு தழுவுதல்” என்ற பெயரில் விளையாட பட்டுள்ளது என்று நிரூபிக்கும் விதமாக கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

டோடா (Toda) மக்கள் தமிழகத்தின் நீலகிரி மலைகளில் வசிக்கும் ஒரு மலைவாழ்  பழங்குடியினர்.அனைத்து வீடுகளிலும் எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

அனைத்து பால் நடவடிக்கைகளுக்கும், பாதிரியார்கள் நியமனமும்  சடங்குகள் மூலமே செய்யப்படுகின்றன.அதுமட்டுமின்றி அந்த இனத்தில் யாராவது ஒருவர் இறந்து விட்டார்கள் என்றால் ஒரு எருமை பலி கொடுக்கப்படுகின்றது. அவர்களின் கூற்றுப்படி இறந்தவர்களுக்கு துணையாக இந்த எருமைகளை அனுப்பி வைக்கிறார்கள். இப்பொழுது இந்தப் பழக்கம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த எருமை இனமே இவர்களால் பாதுகாக்கப்படுகின்றன.

இப்படி பல தரப்பில் நமக்கு உற்ற நண்பனாக இருக்கும் கறவை மாடுகளையும், அதை வளர்க்கும் விவசாயிகளையும் காப்போம். கால்நடை போற்றுவோம்.

தன்வந்தினி.பா

IV. B.V.Sc& A.H

இளநிலை கால்நடை மருத்துவ பட்ட படிப்பு மாணவி

&

முனைவர். சா. தமிழ்க்குமரன்

(கால்நடை நண்பன் JTK)

கால்நடை மருத்துவர் / ஆராய்ச்சியாளர் /பண்ணை ஆலோசகர்

தொடர்புகொள்ள : kalnadainanban@gmail.com

மேலும் தகவலுக்கு: youtube.com/c/kalnadainanbanjtk

 


Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts