நஞ்சுக்கொடி /சத்தை/ உறுப்பு போடவில்லை என்றால் என்ன செய்வது???

ஹாஹா என் மாடு கன்று ஈன்றது என்று ஆனந்தத்தில் இருக்கும் கால்நடை நண்பன் சில நேரம் கழித்து ஐயோ என் மாடு இன்னும் நஞ்சுக்கொடி போடவில்லை என்று புலம்புவதை அதிகம் கேட்டிருக்கிறோம்.

இந்த புலம்பலின் காரணத்தையும் கட்டுப்படுத்தும் வழிகளையும் காண்போம்
நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பைக்கும் கன்றுகுட்டிக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகமாகும். இது கரு தோன்றிய முதல் கர்ப்பப்பையுடன் இணைந்தே இருக்கும். இது கன்றுக்குட்டிக்கு தகுந்த பாதுகாப்பை  சினைக்காலம் முழுவதும் வழங்கி வருகிறது . கன்றுக்குட்டிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில்  பார்த்துக் கொள்வது இந்த நஞ்சுக்கொடியின் வேலை. ஊட்டச்சத்தை மட்டும் அளிக்காமல் கன்றுக்குட்டியின் கழிவையும்  தேக்கி அப்புறப்படுத்துவது இதன் வேலையாகும். சினை காலம் முடிந்த உடனே எவ்வாறு கன்றுக்குட்டியை மாடு வெளியேற்றுகிறதோ அதேபோலவே நஞ்சு கொடியையும் வெளியேற்ற பட வேண்டும். பொதுவாக சத்தான மாடுகள் அரை மணி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடியை போட்டுவிடும்.
நஞ்சுக்கொடி தங்குவதற்கு சமச்சீர் தீவனம் அளிக்காததும் ஒரு காரணம்.
முதலுதவி:
• 1 கிலோ வெண்டைக்காயை  நறுக்கி   கன்று ஈன்ற மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
• 1 தேங்காய் முடி துருவி  அத்துடன் 15 cm  நீளம் உள்ள 4 முள்ளங்கியை 100 கிராம் வெல்லத்துடனும் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு வேலையாக மூன்று நாட்களுக்கு கொடுத்து வர வேண்டும்.
• கன்றை விட்டு பால் குடிக்க வைக்க வேண்டும்
குறிப்பு;
6-8 மணி நேரத்திற்கு மேலும் நஞ்சுக்கொடி போட வில்லை என்றால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
இ.இளையராஜா

Share:

1 comment:

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts