கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏன் ஏற்படுகிறது????

மாடுகளில் தயிர் போன்று மூக்கு சளி அல்லது பால்போல் மாசி/வலும்பு ஊற்றினால் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று இருப்பதற்கு அறிகுறியாகும்.
கர்ப்பப்பையில் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதால் இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது.
காரணம்
1.சுத்தமான முறையில் சினை ஊசி போடப் பட வில்லை என்றால்
2.சினை ஊசி போடும்போது சாணம் கர்ப்பப்பையின் உள் சென்றால்
3.நோய் தொற்று இருக்கும் காளையை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தினால்

நோய் தொற்று ஏற்படும்போது அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிகிச்சை அளித்த பிறகு சினைப்பருவ அறிகுறிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் போது சினை ஊசி போட்டுக் கொள்ளலாம்.
மாடுகளில் கர்ப்பப்பையை சுத்தம் செய்த பிறகும் பால் போன்று அல்லது தயிர் போன்று திரவம் அறையிலிருந்து வெளிவந்தால் அதற்கு இன்னும் நோய் தொற்று இருப்பது இருப்பது உறுதியாகிறது.
நோய்தொற்று குணமடையும் வரை கர்ப்பப்பையை சுத்தம் செய்ய வேண்டும் இந்த முடிவை நீங்கள் மருத்துவரிடம் விட்டுவிட வேண்டும்.
மீண்டும் கண்ணாடி போன்ற தெளிவான மாசி/வலும்பு வரும் வரை காத்திருந்து சினை ஊசி போட வேண்டும்
Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts