Showing posts with label Q&A. Show all posts
Showing posts with label Q&A. Show all posts

கால்நடை நண்பன் JTK கேள்வி பதில் தொகுப்பு - 2


கேள்வி: எங்களது மாடு கன்று ஈன்று மூன்று நாட்கள் ஆகிறது, பால் கறந்து முடிக்கும் இறுதிகட்டத்தில் பால் ரத்தமாக வருகிறது அதாவது ரோஸ்மில்க் போல இருக்கிறது இதற்கு என்ன காரணம்? என்ன செய்வது?

பதில்: கன்று ஈன்ற மாடுகளில் பாலில் ரத்தம் கலந்து வருவது இயல்பான ஒரு செயல் இது கறவை மாடுகளுக்கு இருக்கும் சுண்ணாம்பு சத்து குறைபாட்டினால் காட்டுகிறது. சுமார் ஒரு லிட்டர் பாலில் 9 கிராம் சுண்ணாம்பு சத்து கண்டிப்பாக உற்பத்தி செய்யப்படுகிறது அப்படி இருக்கையில் கரவை பசுவானது 5 முதல் 6 லிட்டர் கறக்கும் ஆனால் அதற்கு குறைந்தபட்சம் 60 கிராம் சுண்ணாம்பு சத்து தேவைப்படுகிறது இந்த சுண்ணாம்பு சத்து கறவை மாடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தில் சரிவிகித அளவில் இல்லை என்றால் பாலில் ரத்தம் கலந்து வருவது இயல்பான விஷயமாக இருக்கிறது இதை சரிசெய்ய 5 எலுமிச்சம்பழம் 5 கைப்பிடி அளவு கருவேப்பிலை (ஒரு வேளைக்கான அளவு) இவை இரண்டையும் நன்றாக அரைத்து அந்த கலவையை மூன்று வேளைக்கு மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் பாலின் நிறம் வெண்மையாக மாறும்.

கேள்வி: எங்கள் மாட்டின் உடல் மீது முழுவதும் தடிப்பு தடிப்பாக உள்ளது நேற்று இரவு முதல் உள்ளது என்ன என்று தெரியவில்லை இதனால் ஏதாவது பிரச்சனை வருமா என்ன செய்வது

பதில்:ஒவ்வாமையின் காரணமாக வந்திருக்கலாம் விஷக்கடி, விஷச்செடி, ஆகியவற்றால் கூட வந்து இருக்க நேரிடும் சோற்றுக் கற்றாழையில் உள்ள சோறை எடுத்து உடல் மீது தடவி வரவும் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி அதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் தடிப்புகள் உடனே மறையும்.

கேள்வி: பிறந்து 20 நாட்கள் ஆன கன்றுக்குட்டிக்கு தொப்புள்கொடி வீக்கமாக உள்ளது இதற்கு என்ன செய்வது என்ன காரணம்

பதில்: பிறந்த கன்று கோட்டைகளில் தொப்புள் கொடியில் நீங்குவதற்கு நோய் தொற்று காரணமாக இருக்கும் சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதால் பின்பற்றாததால் பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படும் இந்த வீக்கம் எப்படி இருக்கிறது என்று பார்த்த பின்னர் அந்த வீட்டின் மூலையில் சிறு வருகிறதா என்பதை தெரிந்து கொண்டேன் அதை சுத்தம் செய்து விட்டு பூசுகின்ற மஞ்சத்தூள் கொழுந்து வேப்பிலை மற்றும் வேப்ப எண்ணெய் இவை மூன்றையும் நன்றாக கலக்கி அந்த காயத்தின் மீது தடவிவர இந்த காயம் குணமாகும் அந்த வீக்கம் பெரிதாகி கொண்டே போனால் துர்நாற்றம் ஆக இவ்வாறு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் பராமரிப்பு இல்லாத பட்சத்தில் அந்த கட்டியை நொடி புழுக்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது

கேள்வி: என் மாடுகளுக்கு இரண்டு கண்களிலும் நீர் வடிந்து கொண்டே இருக்கிறது இதற்கு என்ன காரணம் என்ன செய்வது

பதில்: நீர் வடிந்து கொண்டே இருந்தால் கண்களில் தூசி துரும்பு அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது நோய் தோன்றினாலும் கண்களிலிருந்து நீர் வழியக் கூடும் பெரும்பாலும் ரோட்டோரங்களில் கொட்டைகள் கொட்டகைகளில் வெளியில் கட்டப்பட்டுள்ள கன்றுக்குட்டி மற்றும் மாடுகளுக்கு இதுபோன்று ஆவது இயல்பானவை கண்களை சுற்றி ஒரு வகையான ஈ மொய்த்தால் கூட கண்களிலிருந்து நீர் வடிவதற்கு வாய்ப்புள்ளது

கல்லுப்பு 2 கையளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று நாட்களுக்கு மூன்று வேலைக்கு இந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவி வந்தால் கண்களிலிருந்து நீர் வடிவது தவிர்க்கப்படும் மூன்று நாட்களுக்கு பிறகு கண்களிலிருந்து நீர் வடிவது நிற்க வில்லை என்றால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்

கேள்வி: என்னுடைய மாடு கன்று போட்டு ஐந்து நாட்கள் ஆகிறது மடி பெரிதாக உள்ளது ஆனால் பால் கறக்க கடினமாகவும் பால் உற்பத்தி குறைவாகவே காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்ன செய்ய வேண்டும்

பதில்: இயல்பாக முதல் தீர்த்து கறவை மாடுகள் மடி பெரிதாக காணப்படுவது இயல்பான சில மாடுகளுக்கு மடி முழுவதும் நீர் கோர்த்துக்கொண்டு தொப்புள் முதல் இந்த வீக்கம் காணப்படும் இதற்காக நாம் பயப்பட வேண்டாம் குளிர்ந்த நீரில் தினசரி நான்கு அல்லது ஐந்து முறை கழுவி விட வேண்டும் பின்னர் கால்நடை மருத்துவரின் சிகிச்சையின் படி ஒரு வாரத்திற்குள் மடி இயல்பு நிலைக்கு திரும்பி பால் உற்பத்தி அதிகரிக்கும்

கேள்வி: சினை மாடுகளுக்கு பீர் வேஸ்ட் கொடுக்கலாமா இதனால் எந்த ஒரு பாதிப்பும் வருமா

பதில்: அனைத்து வகையான மாடுகளுக்கும் பீர் வேஸ்ட் கொடுக்கலாம் ஆனால் குறைவாக இருக்க வேண்டும் பீர் வேஸ்ட் எந்த எந்த வகை மாடாக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு வேலைக்கு ஒரு கிலோ என்பது என்பது தான் அளவு

கேள்வி: மாடு கன்று ஈன்ற மூன்று மாதம் ஆகிறது மாடு சரியான பருவத்தில் வருகிறது சினை ஊசி போட்டால் சிறைப்பிடிக்க மாட்டேங்கிறது இதற்கு என்ன காரணம் என்ன செய்ய வேண்டும்

பதில்: சினைப் பருவம் முடிந்து மூன்று மாதங்களுக்குள் மாடு சினை அறிகுறி காட்டினார் மாட்டின் கர்ப்பப்பை வளர்ச்சி சினைப்பருவ சுழற்சி இரண்டும் நன்றாக உள்ளது என்பது பொருள் உங்களது மாடு சரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை மலம் வருகிறதா என்பதை கவனியுங்கள் நடைபெறுவதற்கான அனைத்து அறிவுரைகளையும் தருகிறதா என்பதையும் கவனியுங்கள் சரியாக மாடு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே ஓய்வு அளிக்க வேண்டும் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும்

கேள்வி: ஐயா வணக்கம் என்னுடைய செம்மறி ஆடுகள் இரண்டு அல்லது மூன்று மாதம் சினையாக இருக்கும் போதே கன்றுகளை விசிறி விடுகின்றது அல்லது பிறகும் கண்கள் இரண்டு பிறக்கின்றன இதற்கு என்ன காரணம் இதை எப்படி சரி செய்வது

பதில்: பொதுவாக கன்று வீசுவதற்கு பல காரணங்கள் உண்டு சினை பருவ காலம் முடியும் தருவாயில் என்று கூறினால் அது நோய் தொற்றாக இருக்கும் சிலை உருவான உடனே என்று கூறினால் அது சத்து குறைபாட்டை சுட்டிக் காட்டுகிறது தேவையான அளவு சரிவிகித சமச்சீர் தீவனங்கள் அளிக்காத பட்சத்தில் சத்துக்கள் குறைபாடு ஏற்படும் அதன் மூலமாக மலரும் கன்று குட்டிகளை கோவிலில் நாடுகளுக்கும் தேவையான அளவு சத்துக்கள் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கற்கள் விழுவது இயல்பானதாக இருக்கிறது ஊறவைத்து முளைகட்டி ஒரு கைப்பிடி அளவு தினசரி ஒரு ஆடுகளுக்கு கொடுத்து வந்தால் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்

பதில்கள்:

முனைவர். சா. தமிழ்க்குமரன்

(கால்நடை நண்பன் JTK)

கால்நடை மருத்துவர் / பண்ணை ஆலோசகர்

புதுச்சேரி.


Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts