கால்நடைகளுக்கு ஏன் உப்பு சத்து அவசியம்???

உப்பில் 40 சதவீதம் சோடியம் உள்ளது

இயற்கையாகவே மாடுகள் உப்பு சுவை கொண்ட  தாவரங்களை விரும்பி உண்கின்றன இது அதன் உணவுப் பையிலுள்ள செரிமானத்தை அதிகரிக்கிறது.


அசைபோடும் விலங்குகளான மாடுகள் ஒரு நாளைக்கு 150 லிட்டர் உமிழ்நீர் சுரக்கின்றது இது அது உண்ணும் தாவரங்களை ஜீரணிக்க பெரிதும் உதவுகிறது.


உப்பு கலந்த தீவனத்தை மாடுகள்  அருந்தும் போது அவை அதை மிகவும் விரும்பி உண்கின்றன இது உமிழ்நீர் உற்பத்தியை சீராக்கி செரிமானத்திற்கு உதவுகிறது



ஏன் உப்புச்சத்து (சோடியம் க்ளோரைட்) மாடுகளுக்கு அவசியமானது?
கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு உப்புச்சத்து கால்நடைகளுக்கு அவசியமானது.
1.  பொது உடல் செயல்பாடு பராமரிப்பு
2.  உடலில் திரவ சமநிலை / சவ்வூடுபரவல் (osmosis) பராமரிப்பு   
3.  நரம்புமண்டல பராமரிப்பு
4.  உடலில் நொதி சீராக செயல்படுவதற்கு 
5.  உமிழ்நீர் நன்றாக சுரக்க மற்றும் செரிமானம் ஆவதற்கு 
6.  சத்துக்களை உறிஞ்சி ரத்தத்தில் கடத்துதல் 
7.  இரத்த அழுத்தத்தை சீராக வைக்க 

சோடியம் உடலில் அதிக அளவு சேமிக்கப்படுவதில்லை. அதனால் தினமும்  உப்பு சிறிதளவு தீவனத்தில் கலந்து கொடுப்பதால் மாடுகளின் ஆரோக்கியம் பெருகும்



ஆகவே கண்டிப்பாக உப்புச்சத்து கால்நடைகளுக்கு அவசியமானது. கல்லுப்பை பயன்படுத்தவும். 
 
ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு 1 கைப்பிடி(50 gm) அளவு கொடுத்து வரவும்

தகவல்:

ARUN SHANKER GORKY. A
அருண் சங்கர் கார்க்கி. ஆ
Share:

சத்துக்குறைபாடு தொடர்பான தகவல்கள்


1. சத்துக்குறைபாடு என்றால் என்ன?

கால்நடைகளுக்கு கிடைக்கவேண்டிய சத்துக்கள் முழுமையாககிடைக்காமல் போவதினால் வரக்கூடிய நலிந்த நிலை. 

தேவையான அத்தியாவசிய பொருள் சத்துக்கள்: 
•  கொழுப்புச்சத்து
•  மாவுச்சத்து
•  புரதச்சத்து
•  உயிர்ச்சத்து
•  நீர்ச்சத்து 
•  தாது & நுண்சத்துகள் 
இவை சேர்ந்த அனைத்துமே சமச்சீர்  தீவனம் என்றழைக்கப்படுவது

2. சத்துக்குறைபாடு ஏன் வருகிறது?
•  சமச்சீர் தீவனம் கொடுக்கவில்லை
•  தாது உப்பு (30gm)& கல்லுப்பு ( இரண்டு கைப்பிடி அளவு) கொடுக்கவில்லை
•  சரியான நேரத்தில் குடற்புழுநீக்கம் செய்யவில்லை
* வெப்ப அயர்ச்சி 

  
3. சத்துக்குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
•  சரியான உடல்வளர்ச்சியின்மை -
# வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை 
# கீழ்மார்பு, தோள்பகுதி, விலாப்பகுதி வால்பகுதி, இடுப்பு பகுதி, உடல்பக்கவாட்டில் எலும்புகள் தெளிவாக காணமுடியும்.
# சதைவளர்ச்சி சீராக இருக்காது
# உடல் நன்றாக மெலிந்து காணப்படும், மிகவும் பாதிப்படைந்த மாடுகளில் எலும்புக்கூடு அமைப்பை காணமுடியும்

•  தோல் பளப்பாக இருக்காது, வறண்டு காணப்படும் 
# தோலை இழுத்து விட்டால் பழையநிலைக்கு செல்ல நேரம் எடுக்கும்   

•  அடிக்கடி நோய்த்தாக்கம் ஏற்படும்

•  பால் உற்பத்தி மிக குறைந்து காணப்படும் 

•  மாடுகள் பலவீனமாக காணப்படும்

* மாடு மண்ணை உண்ணும்

4. சத்துக்குறைபாட்டினால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன?
கால்நடைகளை பாதிக்கும் இந்த சத்துக்குறைபாடு - தரமான கால்நடைகள் உருவாக்கத்திற்கும், பண்ணைமேம்பாட்டிற்கும், பண்ணையாளரின் பொருளாதாரவளர்ச்சிக்கும் பெரும் தடையை ஏற்படுத்தும்.

கால்நடைகளில் பின்வரும் தாக்கங்களை விளைவிக்கும்: 
•  கால்நடையின் உற்பத்தித்திறன் குறையும்
•  எளிதில் நோய்வாய்ப்படும்
•நோய்வாய்பட்ட கால்நடைகளை மீட்டெடுத்தல் பெரும் சவாலாக அமையும் 
•  சினைபிடிக்காமை, கருச்சிதைவு , அமர்நிலைப்பசு போன்ற பெரும் சிக்கல்களை உருவாகும் 
•  தரமற்றக்கன்றுகள் பிறக்கும்
•  பால் உற்பத்தி, பாலின் தரம் குறையும்
•  கால்நடைகள் உயிரிழப்புக்களை துரிதப்படுத்தும்

5. சத்துக்குறைபாட்டை எவ்வாறு சரிசெய்வது?
•  மருத்துவரின் ஆலோசனையின்படி  "சரியான நேரத்தில், சரியான மருந்தை, சரியான அளவில்" கால்நடைகளுக்கு கொடுக்கவேண்டும்

•  சமச்சீர் தீவனத்தை - பசுந்தீவனம், அடர்தீவனம், உலர்தீவனம், தாதுப்பு, கல்லுப்பு - சரியான அளவில் கொடுப்பதை உறுதிசெய்யவேண்டும்

•  கால்நடைகளுக்கு குடிக்க  தண்ணீர் தடையின்றி கிடைக்க வழிவகைசெய்யவேண்டும்

•  மருத்துவரின் ஆலோசனையின் பேரில் என்ன சத்துக்கள் குறைபாடு என்று கண்டறியவேண்டும், அதற்கான முதலுதவிகள் & மருத்துவத்தை உடனடியாக செய்யவேண்டும். 

(எ கா) சுண்ணாம்புச்சத்து குறைபாட்டிற்கு - கிளிஞ்சல் ஊறவைத்த நீரை கொடுத்தல்  

•  மிகவும் நலிந்த மாடுகளுக்கு - ஒரு மாதத்திற்கு ஒரு வேளை மட்டும்:
   
# தினமும் 200  கிராம் நாட்டு கம்பு (அ) கொண்டைக்கடலை (அ) ஏதுனும் ஒரு சிறுதானியத்தை முளைகட்டி அரைத்து கொடுக்கவும் 

# வாரம் இருமுறை, ஒருநாளைக்கு மூன்று கிலோ அளவு முருங்கை, அகத்தி, கருவேப்பில்லை இலைகளை கலப்பாக  கொடுக்கவும்  

# தீவனத்தை நன்றாக எடுத்துக்கொள்ள தினமும் இரண்டு கைப்பிடி இளம்பிரண்டையை வெல்லத்துடன், மஞ்சள், சிறிது மிளகு, கல்லுப்பு சேர்த்து  அரைத்து ஒரு லட்டு அளவுகொடுக்கலாம்

# தினமும் இரண்டு முட்டைகளை உடைத்து ஓட்டுடன் மாட்டிற்கு கொடுக்கலாம்.

தகவல்:

ARUN SHANKER GORKY. A
அருண் சங்கர் கார்க்கி. ஆ
Share:

அமர் நிலையில் இருக்கும் பசுக்களைப் பராமரிப்பது எப்படி???

கன்று ஈன்ற மாடுகள் இயல்பாக சுண்ணாம்பு சத்து குறைபாட்டினால் அமர்ந்த நிலையில் காணப்படும்.
இப்படி இருக்கும் மாடுகளுக்கு பராமரிப்பு முதலுதவிகள் என்ன செய்ய வேண்டும்

1. மாடு அமர்ந்திருக்கும் இடத்தை வைக்கோலை கொண்டு நிரப்பி அதன்மேல்  சாக்கு விரித்து மிருதுவான படுக்கை தயார் செய்து அதன் மேல் மாட்டினை அமர வைப்பது சிறந்ததாகும்.
2. மாட்டை ஒரே பக்கத்தில் அமர வைப்பதை தவிர்க்க வேண்டும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் அமர் நிலையை மாற்றியமைக்க வேண்டும்
உதாரணத்திற்கு இடது காலில் அமர்ந்திருக்கும் பசுவை வடக்கு காலில் அமரும்படி மாற்ற வேண்டும்.
இப்படி செய்வதால் கால்கள் மறுப்பதை தவிர்க்க முடியும்.
3. பொறுக்கும் அளவிற்கு சுடுநீர் கொண்டு இரு கால்களிலும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்

குறிப்பு :உடனடியாக மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுப்பது சிறந்தது மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் மருத்துவர் வரும் வரை மாட்டிற்கு பாதிப்பு வராமல் தடுக்கும்
Share:

ஆடுகளில் வயிறு உப்பிசம்

ஆடுகளில் வயிறு உப்பிசம் வர காரணம்



1. அரிசி மற்றும் அரசி சார்ந்த பொருட்களை உண்ணுதல்

2. உணவு பையன் பாதையில் அடைப்பு ஏற்படுதல்

3. தகாத தீவனம் மற்றும் உணவுக் கழிவுகளை உண்ணுதல்

ஆடுகளைப் பொறுத்தவரை வயிறு உப்பிசம் ஒரு கொடிய நோய் உடனடியாக மருத்துவரை அழைப்பது சிறந்த வழி.
முதலுதவியாக ஆப்ப சோடா மாவு ஒரு கைப்பிடி அளவு கால் லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.


Share:

ஆடுகளின் சினைக்காலம்

Share:

சினை மாட்டின் பால் கறவையை படிப்படியாக குறைப்பது எப்படி????

பால் கறவை இயல்பாக குறைப்பதற்கு முதலில் அடர் தீவன அளவை படிப்படியாக குறைத்து வரவேண்டும்.



தீவனத்தை குறைப்பதன் மூலம் படிப்படியாக பாலின் அளவும் குறைய ஆரம்பிக்கும் ஒரு வார காலத்துக்கு இப்படி செய்ய வேண்டும்.
பின்பு இரு வேளையாக இருந்து பால் கறவையை ஒரு வேலையாக மாற்ற வேண்டும் இப்படி படிப்படியாக பால் கறப்பதையும் 
தீவனம் அளிப்பதையும் குறைத்து வர பாலின் அளவும் குறையும்.
பால் முழுவதும் குறைந்த பிறகு தீவன அளவை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம்.
Share:

கால்நடைகளை எப்படி குளிப்பாட்டலாம்????

கால்நடைகள் நம்மைப் போல் தினமும் குளிக்காது நாம்தான் அது உடலை சுத்தப்படுத்த வேண்டும்.

கறவை மாடுகளை சுத்தப்படுத்த அதனை குளிப்பாட்டும் போது சுத்தமான நீர் கொண்டு உடலை கழுவலாம் அதனுடன் தேங்காய் நார் பஞ்சு அல்லது வைக்கோல் இது இரண்டையும் கொண்டு மாட்டின் உடலை நன்கு தேய்த்து குளிப்பாட்டலாம் தினசரி மாட்டின் உடலை grooming brush வைத்து  தேய்த்து விட்டாலே போதும் மாட்டின் சருமம் பளபளப்பாக இருக்கும்


Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts