சத்துக்குறைபாடு தொடர்பான தகவல்கள்


1. சத்துக்குறைபாடு என்றால் என்ன?

கால்நடைகளுக்கு கிடைக்கவேண்டிய சத்துக்கள் முழுமையாககிடைக்காமல் போவதினால் வரக்கூடிய நலிந்த நிலை. 

தேவையான அத்தியாவசிய பொருள் சத்துக்கள்: 
•  கொழுப்புச்சத்து
•  மாவுச்சத்து
•  புரதச்சத்து
•  உயிர்ச்சத்து
•  நீர்ச்சத்து 
•  தாது & நுண்சத்துகள் 
இவை சேர்ந்த அனைத்துமே சமச்சீர்  தீவனம் என்றழைக்கப்படுவது

2. சத்துக்குறைபாடு ஏன் வருகிறது?
•  சமச்சீர் தீவனம் கொடுக்கவில்லை
•  தாது உப்பு (30gm)& கல்லுப்பு ( இரண்டு கைப்பிடி அளவு) கொடுக்கவில்லை
•  சரியான நேரத்தில் குடற்புழுநீக்கம் செய்யவில்லை
* வெப்ப அயர்ச்சி 

  
3. சத்துக்குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?
•  சரியான உடல்வளர்ச்சியின்மை -
# வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை 
# கீழ்மார்பு, தோள்பகுதி, விலாப்பகுதி வால்பகுதி, இடுப்பு பகுதி, உடல்பக்கவாட்டில் எலும்புகள் தெளிவாக காணமுடியும்.
# சதைவளர்ச்சி சீராக இருக்காது
# உடல் நன்றாக மெலிந்து காணப்படும், மிகவும் பாதிப்படைந்த மாடுகளில் எலும்புக்கூடு அமைப்பை காணமுடியும்

•  தோல் பளப்பாக இருக்காது, வறண்டு காணப்படும் 
# தோலை இழுத்து விட்டால் பழையநிலைக்கு செல்ல நேரம் எடுக்கும்   

•  அடிக்கடி நோய்த்தாக்கம் ஏற்படும்

•  பால் உற்பத்தி மிக குறைந்து காணப்படும் 

•  மாடுகள் பலவீனமாக காணப்படும்

* மாடு மண்ணை உண்ணும்

4. சத்துக்குறைபாட்டினால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன?
கால்நடைகளை பாதிக்கும் இந்த சத்துக்குறைபாடு - தரமான கால்நடைகள் உருவாக்கத்திற்கும், பண்ணைமேம்பாட்டிற்கும், பண்ணையாளரின் பொருளாதாரவளர்ச்சிக்கும் பெரும் தடையை ஏற்படுத்தும்.

கால்நடைகளில் பின்வரும் தாக்கங்களை விளைவிக்கும்: 
•  கால்நடையின் உற்பத்தித்திறன் குறையும்
•  எளிதில் நோய்வாய்ப்படும்
•நோய்வாய்பட்ட கால்நடைகளை மீட்டெடுத்தல் பெரும் சவாலாக அமையும் 
•  சினைபிடிக்காமை, கருச்சிதைவு , அமர்நிலைப்பசு போன்ற பெரும் சிக்கல்களை உருவாகும் 
•  தரமற்றக்கன்றுகள் பிறக்கும்
•  பால் உற்பத்தி, பாலின் தரம் குறையும்
•  கால்நடைகள் உயிரிழப்புக்களை துரிதப்படுத்தும்

5. சத்துக்குறைபாட்டை எவ்வாறு சரிசெய்வது?
•  மருத்துவரின் ஆலோசனையின்படி  "சரியான நேரத்தில், சரியான மருந்தை, சரியான அளவில்" கால்நடைகளுக்கு கொடுக்கவேண்டும்

•  சமச்சீர் தீவனத்தை - பசுந்தீவனம், அடர்தீவனம், உலர்தீவனம், தாதுப்பு, கல்லுப்பு - சரியான அளவில் கொடுப்பதை உறுதிசெய்யவேண்டும்

•  கால்நடைகளுக்கு குடிக்க  தண்ணீர் தடையின்றி கிடைக்க வழிவகைசெய்யவேண்டும்

•  மருத்துவரின் ஆலோசனையின் பேரில் என்ன சத்துக்கள் குறைபாடு என்று கண்டறியவேண்டும், அதற்கான முதலுதவிகள் & மருத்துவத்தை உடனடியாக செய்யவேண்டும். 

(எ கா) சுண்ணாம்புச்சத்து குறைபாட்டிற்கு - கிளிஞ்சல் ஊறவைத்த நீரை கொடுத்தல்  

•  மிகவும் நலிந்த மாடுகளுக்கு - ஒரு மாதத்திற்கு ஒரு வேளை மட்டும்:
   
# தினமும் 200  கிராம் நாட்டு கம்பு (அ) கொண்டைக்கடலை (அ) ஏதுனும் ஒரு சிறுதானியத்தை முளைகட்டி அரைத்து கொடுக்கவும் 

# வாரம் இருமுறை, ஒருநாளைக்கு மூன்று கிலோ அளவு முருங்கை, அகத்தி, கருவேப்பில்லை இலைகளை கலப்பாக  கொடுக்கவும்  

# தீவனத்தை நன்றாக எடுத்துக்கொள்ள தினமும் இரண்டு கைப்பிடி இளம்பிரண்டையை வெல்லத்துடன், மஞ்சள், சிறிது மிளகு, கல்லுப்பு சேர்த்து  அரைத்து ஒரு லட்டு அளவுகொடுக்கலாம்

# தினமும் இரண்டு முட்டைகளை உடைத்து ஓட்டுடன் மாட்டிற்கு கொடுக்கலாம்.

தகவல்:

ARUN SHANKER GORKY. A
அருண் சங்கர் கார்க்கி. ஆ
Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts