Showing posts with label கன்று குட்டி. Show all posts
Showing posts with label கன்று குட்டி. Show all posts

பிறந்த கன்று குட்டியின் வாயில் இருந்து எச்சில் வடிவதற்கு காரணம் என்ன???

இயல்பாக மாடுகளுக்கு 4 உணவுப் பைகள் இருக்கும்.
கன்று பிறந்த 21 நாட்களில் இருந்து அதன் உணவுப் பைகள் விரிவடையத் தொடங்கும்.
இதுபோன்ற நேரங்களில் அசைபோடுவதின் முக்கியத்துவம் கன்று குட்டிகளின் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இதனால் சில கன்றுகுட்டி களில் அசை போடும் பொழுது அதிகமாக எச்சில் சுரக்க வாய்ப்புள்ளது.
இது இயல்பான ஒரு நடவடிக்கை தான் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்.
சில கன்று குட்டிகள் உட்கொண்ட தீவனம் செரிமானம் ஆகாமல் அசை போடும்போது அப்படியே வெளியே தள்ளி விட நேரிடும்.
 கன்று குட்டிகள் வாந்தி எடுத்தது போல் தோன்றும்.
இதுவும் இயல்பானதுதான் உணவுப்பை விரிவடைவதற்குகான அறிகுறியே இது காட்டுகிறது.
 இரண்டு மூன்று நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும்

குறிப்பு: தொடர்ந்து இதுபோல் இரண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது
Share:

பால் குடிக்க முடியாத கன்று குட்டிகளுக்கு பால் குடிக்க பழக்குவது எப்படி?????

சில கன்று குட்டிகள் பிறக்கும்போது தாய்ப்பசு களால் நிராகரிக்கப்படுகிறது.
 சில சமயங்களில் மடிப்புகள் பெரிதாக இருக்கும் போது கன்று குட்டிகளால் பால் குடிக்க முடியாது.

 இதுபோன்ற சமயங்களில் கன்று குட்டிகளுக்கு பால் குடிக்க வைப்பது எப்படி
நம் சுண்டுவிரலை கன்று குட்டியின் வாயில் வைத்து பால் குடிக்க பழக்கவேண்டும் இயல்பாக கன்றுக்குட்டிகள் நீங்கள் உங்கள் சுண்டு விரலை வைத்த உடனேயே பொறுமையாக பால் குடிக்கும் இயல்பை பெற்றுவிடும்.
சிறிது நேரம் கழித்து நம் விரலை எடுத்துவிட்டு புட்டிப்பாலையோ மாட்டின் காம்பையோ கன்றுக் குட்டிக்கு பால் குடிக்க பழக்கி விட வேண்டும்.
பால் குடிக்க முடியாத கன்று குட்டிகளுக்கு நாமாக பாலை syringil எடுத்து பொறுமையாக ஊட்டி விட வேண்டும்.
Share:

கன்று குட்டிகளுக்கான குடற்புழு நீக்கம்


குடற்புழு நீக்கம் கன்றுக்குட்டிகளுக்கு முக்கியமான பராமரிப்பு சார்ந்த விஷயமாக இருக்கிறது. கன்று பிறந்த 21 நாட்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். பின்பு 6 மாதம் வரை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு குடற்புழு நீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். கன்று குட்டி கிடேரி ஆன பிறகு வருஷம் இரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் நல்லது. இந்த அட்டவணைப்படி குடற்புழு நீக்கம் செய்துவந்தால் கன்று குட்டிகள் விரைவில் பருவத்திற்கு வரும் நாம் செய்யும் கால்நடை வளர்ப்பு தொழில் லாபகரமாக அமையும்.

மாடுகளை பொறுத்தமட்டில் வருடம் இருமுறை குடற்புழு நீக்கம் செய்தால் நல்லது மழைக்காலத்திற்கு முன்னரும் வெயில் காலத்திற்கு முன்னரும்


Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts