கன்று போட்ட உடனே மாடுகளுக்கு என்னவகை தீவனம் கொடுக்க வேண்டும்????

கன்று போட்ட மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பது சிறந்ததாகும்.
 அடர் தீவனத்தை பொருத்தமட்டில் கன்று ஈன்ற முதல் இரண்டு நாட்களுக்கு தவிடு மற்றும் புண்ணாக்கு வகைகளை தவிர்ப்பது நல்லது.
கன்று ஈன்ற மாடுகளுக்கு தெம்பு ஊட்டும் வகையில் துவரம் பொட்டு வெல்லம் கேழ்வரகு, வேண்டுமென்றால் சிறிதளவு தவிடு இவை அனைத்தையும் கலந்து முதல் 2 நாட்களுக்கு கொடுத்து வரலாம்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இயல்பாக நாம் கொடுக்கும் தீவனத்தை கொடுக்கத் தொடங்கலாம்.
குடிப்பதற்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பசுந்தீவனம் வேண்டிய அளவிற்கு கொடுக்கலாம்.
Share:

கறவை மாடுகளுக்கு நோய் பரவலை தடுக்க என்னென்ன தடுப்பூசி போட வேண்டும்?

கறவை/ எருமை மாடுகளை தாக்கும் நுண்ணுயிரிகளை தடுப்பதற்கு முக்கிய வழிமுறை நோய் தடுப்பாகும். அதற்கு சரியான நேரத்தில் சரியான தடுப்பூசி போடுவது கறவை/ எருமை மாடுகளை நோய் தொற்றிலிருந்து பாதுக்காக்கும். பண்ணையாளர்கள் பொருளாதார இழப்பை தடுக்க தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம்.

தடுப்பூசி போடுவதால் பால் உற்பத்தி குறையாது, கரு சிதைவு ஏற்படாது 

வ. எண்

நோயின் பெயர்

வயது

காலம்

1.          

கோமாரி/ காணை நோய்  (FMD)

மூன்று மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் அனைத்து வயது மாடுகளுக்கும்

வருடம் இருமுறை

(மார்ச் மற்றும் ஆகஸ்ட்)

2.          

தொண்டை அடைப்பான் (HS)

ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் அனைத்து வயது மாடுகளுக்கும்

வருடம் ஒருமுறை

3.          

சப்பை நோய் (Black Quarter)

ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் அனைத்து வயது மாடுகளுக்கும்

வருடம் ஒருமுறை

4.          

கருச்சிதைவு நோய்   (Brucellosis)

ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் அனைத்து வயது மாடுகளுக்கும்

வருடம் ஒருமுறை

(பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும்)

5.          

அடைப்பான் (Anthrax)

ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் அனைத்து வயது மாடுகளுக்கும்

6.          

வெறிநாய்கடி நோய் (Rabies)

வெறிநாய் கடித்த கால்நடைகளுக்கு உடனடியாக போட படவேண்டும்

நாய்க்கடியின் தீவிரத்தை பொறுத்து தடுப்பூசிகள் போடப்படும்

0,4,7,14,28 ஆம் நாள்


தடுப்பூசி போட்டால் பால் குறையுமா?

பெரும்பாலும் கறவை மாடு / எருமை மாடு வளர்க்கும் விவசாயிகள் தங்கள் பண்ணையில் உள்ள கறவை பசு மற்றும் சினை மாட்டிற்கு தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். அது மிகப்பெரும் தவறாகும். தடுப்பூசி போடுவதால் பால் குறையாது.  அப்படியே குறைந்தாலும் இரண்டு நாட்களில் பால் கறவை மீண்டு வரும். அதேபோல் கருச்சிதைவும் ஏற்படாது. ஆரோக்கியமான மாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். சத்து குறைபாடு உள்ள மாடுகளுக்கு மட்டும் பால் கறவையின் அளவு மீண்டு வர நேரம் எடுக்கும். அதனால் அனைவரும் உங்கள் பண்ணையில் உள்ள அனைத்து வயது மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியம்.  

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் (NADCP):

கோமாரி / காணை நோய் தடுக்க மாடுகள், எருமை, செம்மறி ஆடு, ஆடு மற்றும் பன்றிகள் உட்பட 50 கோடிக்கும் அதிகமான கால்நடைகளுக்கும் கருச்சிதைவு நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் நோயை தடுக்க ஆண்டுதோறும் 3.6 கோடி கிடேரி கன்றுகளுக்கு மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்படவேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். 

மேலே உள்ள இரண்டு நோய்களுக்கும் அரசாங்கமே இலவசமாக தடுப்பூசி போடுகிறது. மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி போட்டுக்கொள்வது நல்லது. கோமாரி, சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் ஆகிய மூன்று நோய்களுக்கும் பன்முக தடுப்பூசி கிடைக்கின்றது. இதை போடுவதன் மூலம் மூன்று நோய்களுக்கான பாதுகாப்பு ஒரே தடுப்பூசியில் கிடைக்கும்.

முதல் முறையாக இப்பொழுது பரவி வரும் பெரியம்மை நோய் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பூசி தற்போது நம்மிடம் இல்லையென்றாலும் வருங்காலத்தில் இதற்கான தடுப்பூசி போடப்படும்போது அதையும் வருடம் ஒரு முறை போட்டு கொள்வது அவசியம். 

குறிப்பு:

  • தடுப்பூசி போடும் நேரத்தில் மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
  • தடுப்பூசி போடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.
  • மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட வேண்டும்.
  • தடுப்பூசி போட்ட விவரங்களை பதிவு செய்வது மிகவும் அவசியம்.
  • குளிர் சங்கிலியில் பாதுகாக்கப்பட்ட தடுப்பூசி போடுவது நல்லது
  • ஒவ்வொரு மாட்டிற்கும் தனி ஊசி பயன்படுத்தப்பட வேண்டும்.
கோமாரி தடுப்பூசி விழிப்புணர்வு பாடல்


தடுப்பூசி போட்டு!!! நோய தூர ஓட்டு!!!

தடுப்பூசி போடுவோம்!!! வாழ்வாதாரம் காப்போம்!!!

முனைவர் சா. தமிழ்குமரன்

(கால்நடை நண்பன் JTK)

கால்நடை மருத்துவர் / ஆராய்ச்சியாளர் /பண்ணை ஆலோசகர்

Share:

கறவை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் கவனம் தேவை


கால்நடை வளர்ப்பு லாபகரமாக கொண்டு செல்ல பாலின் உற்பத்தி செலவை  குறைப்பதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் ஏனென்றால் பால் உற்பத்தி செலவில் 65% சதவீத செலவு தீவன செலவு ஆகும். இதை மனதில் கொண்டு தீவன மேலாண்மையை  சரிவர பின்பற்றினால்  கறவை மாடு வளர்ப்பில் நாம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.  தீவனம் அளிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே ஆனால் அதை எப்படி அளிப்பது,  எப்படி அளிக்கக்கூடாது,  என்றும் தெரிந்துகொள்வது  கறவை மாடு  வளர்ப்பில் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது.  இந்த நோக்கில் ஒவ்வொரு கால்நடை விவசாயிகளும் பின்பற்றவேண்டிய தீவன மேலாண்மையின் முக்கிய பயன்பாடுகளை  இந்த கட்டுரையில் காண்போம்.


கறவை மாடுகளுக்கு நாம் அளிக்கும் தீவன வகைகள் - பசும் தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனம் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே ஆகும். அனால் அதை கறவை மாடுகளுக்கு எப்படி கொடுப்பது என்பதை தெரிந்து கொள்வது நம் கடமையாக உள்ளது.   

முக்கியமாக பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என நாம் அனைவரும் நினைக்கும் ஒரு தவறான கருத்து அதிகமாக தீவனம் கொடுத்தால் அதிகமாக பால் கறக்கும் என்பதுதான் இது நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டால் கிடையாது ஏனென்றால் மனிதர்களை போன்ற குடலமைப்பு கறவை மாடுகளுக்கு கிடையாது.  மாடுகளுக்கு நான்கு வகையான உணவுப் பைகள் உண்டு அதை போட்டி என்று அழைக்கப்படுகிறது. அதில் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்கள், கிருமிகள் வாழ்கின்றன. கறவை மாடுகள் உண்ணக்கூடிய பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம் இவை அனைத்தையும் இந்த கிருமிகள் ஜீரணித்து உடலுக்கு தேவையான சத்துக்களாக மாற்றி பின் சிறுகுடல் குடலிற்கு அனுப்புகிறது.

இந்த ஒரு விஷயத்தை மட்டும் தான் நாம் மனதில் கொள்ள வேண்டும். புதிதாக மாடு வாங்குபவர்கள்,  சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கறவை மாடுகளுக்கு திடீரென்று தீவனத்தை மாற்றுவது சரியான விஷயம் கிடையாது ஒரு தீவனம் அளித்து கொண்டு வரும்போது அந்த தீவனத்திற்கு ஏற்றார்போல் உணவுப் பைகளில்  உள்ள கிருமிகள் அந்த சத்துக்களை ஜீரணிக்க செய்கிறது ஆனால் உணவில் மாற்றமோ  குறைவோ ஏற்படும் போது அந்த மாடுகளின் உணவு பைகளில் உள்ள கிருமிகள் அந்த தீவனத்தை ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது . இதனால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது, பால் உற்பத்தியும் குறைகிறது.புதிது புதிதாக தீவனகள் அளிப்பதை தவிர்த்து சமச்சீர் சரிவிகித தீவனம் அளித்து வர வேண்டும்.  இதை தடுப்பதற்கு நாம் பின்பற்றவேண்டிய மேலாண்மை விஷயங்கள் என்னவென்றால்

நாம் கறவை மாடுகளுக்கு அளித்துவரும் தீவனங்களை திடீரென்று மாற்றக்கூடாது உதாரணத்திற்கு இன்று குச்சி தீவனம் கொடுத்து வரும் ஒரு விவசாயி நாளை குச்சி தீவனம் தீர்ந்துவிட்ட பிறகு இன்று ஒரு நாளைக்கு மட்டும் கோதுமை தவிடு கொடுக்கலாம் என்று நினைத்தால் பாதிப்பு அங்கேயே தொடங்குகிறது நாம் எந்த ஒரு தீவனத்தை குறைத்தாலும் இல்லை மாற்றி கொடுத்தாலும் அதை படிப்படியாக செய்ய வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு முறை தீவனத்தில் மாற்றம் கொண்டு வரும் போதும் அது நேரடியாக உணவுகளில் இருக்கும் கிருமிகளை பாதிக்கிறது கிருமிகளை பாதிக்கும் போது வயிற்றில் அஜீரண கோளாறு ஏற்படுகிறது இதன் தாக்கமாக மாடுகள் சரிவர சத்துக்களை ஜீரணம் செய்யாமல் கழிய தொடங்குகிறது இதனால் பெருமளவில் பால் உற்பத்தி திறன் குறைகிறது புதிதாக மாடு வாங்கி வருபவர்கள் நீங்கள் யாரிடத்தில் மாடு வாங்குகிறார்களோ அவர்களிடம் என்ன வகையான தீவனம் கொடுத்தார்கள் என்று கேட்டு முதல் ஒருவாரம் அதையே பின்பற்றி பின் பொறுமையாக நீங்கள் அளித்துவரும் கலப்பின அடர்தீவன விஷயங்களை பின்பற்றி வரலாம் அப்படி செய்யும்போது நமக்கு பொருளாதார இழப்பு ஏற்படாது.

எனவே முக்கியமாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் தீவனத்தை கால்நடைகளுக்கு முக்கியமாக கறவை மாடுகளுக்கு திடீரென்று மாற்றுவதை தவிர்க்கவும் குறிப்பிட்ட தீவனத்தை மாற்றி அளிக்கும் போது படிப்படியாக உயர்த்துங்கள் உதாரணத்திற்கு நாலு கிலோ அடர்தீவனம் நீங்கள் கொடுத்து வருகிறீர்கள் என்றால் முதல் நாள் அரை கிலோ குறைத்து புதிய தீவனத்தில் புதிய தீவனத்தில் கலந்து கொடுக்கலாம் நாளடைவில் அரை கிலோ ,ஒரு கிலோ பின்பு ஒன்றரை கிலோ பின்பு இரண்டு கிலோ அதனைத் தொடர்ந்து படிப்படியாக புதிய தீவனத்தை அளவை உயர்த்தலாம். இந்த முறை அனைத்து வகையான தீவனகளுக்கும் பொருந்தும் .

மேற்குறிய தகவல்களை பின்பற்றினால் நம் கறவை பசுக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது, பால் உற்பத்தி அளவும் குறையாது. பொருளாதார இழப்பை பெருமளவு கட்டு படுத்தலாம்.

 

முனைவர். சா. தமிழ்க்குமரன்

(கால்நடை நண்பன் JTK)

கால்நடை மருத்துவர் / பண்ணை ஆலோசகர்

புதுச்சேரி.

 


Share:

அரிசி/தானியங்களை மாடுகளுக்கு எப்படி கொடுப்பது?????

தானியங்கள் அனைத்தையும் அரைத்து ஊற வைத்துக் கொடுப்பது சிறந்தது. கஞ்சியாக காய்ச்சி கொடுப்பது தவறு.

அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு கிலோ என்ற அளவில் தானியங்களை மாடுகளின் தீவனத்தில் கலந்து கொடுத்து வரலாம். 


தானியங்களை மண் போன்ற நர நர என்று இருக்கும் பக்குவத்தில் அரைத்துக் கொடுப்பது சிறந்தது


 கூழாக காய்ச்சி கொடுக்கும்போது தானியங்கள் முழுமையாக ஜீரணிக்க படுவதில்லை கொடுப்பதில் பாதி  வீணாகிவிடும்.

அதேபோல் தானியங்களை  முழுமையாக பாதியாக உடைத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தானியங்களை அப்படி கொடுக்கும்போது அது சரியாக ஜீரணிக்க படாமல் சாணத்தில் அப்படியே வெளியேறும்.

அதிக அளவில் அரிசி மற்றும் தானிய மாவுகளை கால்நடைகளுக்கு அளிக்கும்போது  மாடுகளின் உணவுப் பையிலுள்ள நுண்ணுயிர்கள் இறக்க நேரிடும் இதனால் அஜீரண கோளாறு ஏற்படும்

குறிப்பு: முடிந்த அளவு அரிசி மற்றும் கோதுமையை கறவை மாடுகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவும்

Share:

மாடுகளில் சினை காலம்

மாடுகள் கன்று ஈனுவதற்கு 280 நாட்கள் ஆகும்.
எருமை மாடுகள் கன்று ஈனுவதற்கு 300 நாட்கள் ஆகும்.
சில நேரங்களில் கன்று 10 நாட்களுக்கு முன்னரோ அல்லது 10 நாட்களுக்கு பின்னரோ கன்று ஈன கூடும்.
காளைக்கு சேர்த்த அல்லது சினை ஊசி போட்ட தேதியை குறித்து வைத்துக் கொள்வது நமக்கு மாடுகள் கன்று எப்பொழுது கன்று ஈனும் எனும் தகவலை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

கால்நடை நண்பன் JTK
Share:

கால்நடை வளர்ப்பவர்களுக்கு காப்பீடு திட்டம்

தமிழகத்தில் கால்நடைத்துறை மூலமாக வழங்கப்படும் காப்பீட்டு திட்டம் இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது இதற்கு ஒவ்வொரு கால்நடை விவசாயம் தங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று இதனைப் பற்றிய விவரம் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ஒரு விவசாயிக்கு 5 மாடுகள் வரை காப்பீடு செய்யும் வசதி உள்ளது இதில் அதிகபட்சம் ஒரு கறவை மாட்டின் மதிப்பு ரூபாய் 35 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் 2% பணத்தை காப்பீடாக செலுத்த வேண்டும் அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள விவசாயிகளுக்கு 70 சதவீதமும் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதமும் அளிக்கப்படுகிறது.
இரண்டரை வயது முதல் எட்டு வயது வரை உள்ள கறவை மாடுகளை இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகவும்.
காப்பீடு எப்போது கிடைக்காது
திருடுபோன மாடுகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படாது
Share:

தாது உப்பு கலவை என்றால் என்ன?????

தாது உப்பு கலவை என்பது சுண்ணாம்புச் சத்து மணிச்சத்து போன்ற நுண் சத்துக்கள் அடங்கிய கலவையாகும். இதை ஆங்கிலத்தில் Mineral mixture என்று அழைப்பார்கள்.
இதை அனைத்து வகையான மாடுகளுக்கும் தினசரி கொடுத்து வரலாம் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது தினசரி குறைந்தது 30 கிராம் தீவனத்துடன் கலந்து கொடுத்து வர வேண்டும்.
இது அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளிலும் மருந்து கடைகளிலும் (medical shop) கால்நடை பல்கலைக்கழக தகவல் மையங்களிலும்  (VUTRCs) கிடைக்கும்.
இதன் விலை ₹50 லிருந்து ₹250  வரையில் கிடைக்கிறது.
தாது உப்பு கலவை என்பது கன்றுக்குட்டி, கிடேரி, காளை, கறவைப் பசு ஆகிய அனைத்திற்கும் கொடுக்கப்பட வேண்டியது. தாது உப்பு என்பது ஒன்றுதான் அது அனைத்து வகையான மாடுகளுக்கும் சமமானது.



Share:

மாடுகளில் கழிச்சலுக்கு என்ன செய்வது?????

கொப்பரை தேங்காய் (தேங்காய் எண்ணெய் எடுப்பதற்காக காயவைக்கப்பட்ட தேங்காய்) ஒரு மூடி + நூறு கிராம் வெல்லம் இரண்டையும் ஒன்றாக அரைத்து ( ஒரு வேளைக்கான அளவு) காலை, மதியம், மாலை கொடுத்து வரவும்.
கன்றுக்குட்டிகளுக்கு மேலே கூறிய அளவில் நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் கொடுக்கவும் 
கழிச்சல் குறையாவிட்டால் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை கொடுத்து வரலாம்.
இப்படி செய்வதினால் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அழைத்து சிகிச்சை பெறுவது நல்லது
Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts